பல வருடங்களுக்குப்பின்பு நாடு திரும்ப காத்திருக்கும் பெண்: கைது செய்ய முயற்சிக்கும் இங்கிலாந்து அரசு!!! பரபரப்பு சம்பவம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
இங்கிலாந்தின் குடியுரிமை பெற்ற ஷமிமா பேகம் (20) என்ற பெண் மாணவியாக இருக்கும்போது இங்கிலாந்தில் இருந்து ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் இணைந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அவர் மாணவியாக நாட்டை விட்டு சென்றபோது அவருக்கு வயது 15 என்பதும் தற்போது 3 குழந்தைகளுக்குத் தாய் என்பதும் குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளுக்கு பிறகு நாடு திரும்ப காத்திருக்கிறார் ஷமிமா பேகம். ஆனால் இங்கிலாந்து அரசு அவரை பயங்கரவாத குற்றச் செயலுக்காக கைது செய்யக் காத்திருப்பதாகவும் மேலும் அவரிடம் சர்வதேச பயங்கரவாதத்தைக் குறித்து விசாரணை நடத்த உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு ஷமீமா பேகத்தின் குடியுரிமையை அந்நாட்டின் குடியுரிமை உள்துறை அலுவலகம் ரத்து செய்தது. ஆனால் சர்வதேச உரிமைகள் அமைப்பு ஒன்று, ஒரு நபரின் சிவில் உரிமைகளை பறிக்கக் கூடாது என இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து இருந்தது. இந்த வழக்கை விசாரித்த அந்நாட்டின் மேல்முறையீட்டு நீதிமன்றம் ஷமிமாவின் குடியுரிமை பறிக்கப் படக்கூடாது எனத் தீர்ப்பளித்து இருக்கிறது. மேலும் தன்னுடைய குடியுரிமை தொடர்பான வழக்குக்கு நேரில் ஆஜராகும்படி வலியுறுத்தி இருக்கிறது. இதனால் பல ஆண்டுகளாக இங்கிலாந்திற்கு செல்ல முடியாமல் இருக்கும் ஷமிமா திரும்பி செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் ஷமிமா இங்கிலாந்து வருவார் எனவும் எதிர்பார்க்கப் படுகிறது.
தற்போது வடக்கிழக்கு சிரியாவின் உள்ள அகதிகள் முகாமில் அவர் வாழ்ந்து வருகிறார். அந்த முகாமில் பாதுகாப்பு பிரிவில் உள்ள ஒரு அதிகாரி ஒருவர் ஷமிமா இங்கிலாந்துக்கு வருவது குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார். தன்னுடைய குடும்பத்தையும் நாட்டையும் பார்க்க ஆர்வமாக இருக்கிறார் எனத் தெரிவித்து இருக்கிறார். ஆனால் இங்கிலாந்தின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட ஐ.எஸ் தீவிரவாத அமைப்பால் பாதிக்கப் பட்ட உயர் அதிகாரிகள் ஷமிமாவை நாட்டிற்குள் அனுமதிக்கக் கூடாது. ஒருவேளை வந்தால் உடனே கைது செய்யப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைத்து வருகின்றனர். அல்ரோஜ் முகாமில் பல ஆண்டுகளாக வசித்து வரும் அந்தப் பெண் தற்போது அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout