'இதுதான் உண்மையான 'மீ டூ': பேங்க் மேனேஜரை புரட்டி எடுத்த பெண்

  • IndiaGlitz, [Tuesday,October 16 2018]

பெண்கள் தங்களுக்குக் நேர்ந்த பாலியல் தொல்லைகளை மீடூ ஹேஷ்டேக்கில் பதிவு செய்து அந்த பதிவு ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவி, அதற்கு ஆதரவாக ஒருசிலரும் எதிர்ப்பு தெரிவித்து ஒருசிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதன்பின்னர் ஒருசில நாட்களில் அடுத்த பிரச்சனை வந்ததும் மீடூ பிரச்சனைகளை வழக்கம்போல் மறந்துவிட்டு புதிய பிரச்சனைக்கு முக்கியத்துவம் செலுத்த தொடங்கிவிடுவார்கள். மீடூவில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மறக்கப்பட்டுவிடும் நிகழ்வுகளும் ஏற்படலாம்

இந்த நிலையில் வங்கியில் லோன் கேட்ட பெண் ஒருவரை பாலியல் உறவுக்கு அழைத்த வங்கியின் மேனேஜரை அந்த பெண் வங்கிக்கு வெளியே இழுத்து வந்து உருட்டுக்கட்டையாலும், செருப்பாலும் நடுரோட்டில் அடித்து புரட்டி எடுத்துள்ளார். இதுகுறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.

மேலும் இதுதான் உண்மையான மீடூ என்றும், தண்டனை உடனுக்குடன் கிடைத்தால் மட்டுமே இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கிடைக்கும் என்றும் சமூக வலைத்தள பயனாளிகள் கமெண்ட் அளித்து வருகின்றனர்.