கடிதத்தின் மூலம் அதிபர் ட்ரம்ப்புக்கு விஷம் வைத்தது ஒரு பெண்ணா??? பரபரப்பு சம்பவம்!!!
- IndiaGlitz, [Monday,September 21 2020]
கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கு விஷம் (Ricin) படிந்த கடிதம் ஒன்று வந்ததாகப் பரபரப்பு தகவல் வெளியானது. வெள்ளை மாளிகையில் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பணியில் ஈடுபட்டு இருந்தபோது இந்த கடிதத்தைக் கைப்பற்றியதாகவும் கூறப்பட்டது. மேலும் அந்தக் கடிதம் கனடாவில் இருந்து அனுப்பட்டது என்ற தகவலையும் அவர்கள் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் விஷம் படிந்த கடிதம் அனுப்பப்பட்டது தொடர்பாக FBI தீவிர விசாரணையை மேற்கொண்டு வந்தது. தற்போது இதுதொடர்பாக கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு வரும் எல்லைப் பகுதியில் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவர்தான் அதிபர் ட்ரம்ப்புக்கு விஷம் படிந்த கடிதத்தை அனுப்பினார் என்ற தகவலையும் சில ஊடகங்கள் தெரிவித்து இருக்கின்றன. ஆனால் அந்தப் பெண்ணைக் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
மேலும் Ricin என்பதும் அதிக கொடிய விஷமுடையது என்றும் கூறப்படுகிறது. இந்த விஷம் தடவிய கடிதத்தை அதிபருக்கு அனுப்பப் பட்டதால் அமெரிக்காவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் மேலும் பதட்டத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்பட்டது. இந்த வழக்கில் தற்போது ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல ஒரு சம்பவம் கடந்த 2018 இல் நடைபெற்று இருக்கிறது. முன்னாள் கடற்படை வீரர் ஒருவர் அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது பிற நிர்வாக அதிகாரிகளுக்கு Ricin தடவிய கடிதத்தை அனுப்பியதாகக் கைது செய்யப்பட்டார். அதனால் அவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போதும் அதேபோல ஒரு சம்பவம் நடைபெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.