ஒரே நேரத்தில் 2 வாலிபருடன் திருமணம்? விண்ணப்பித்த பெண்ணிற்கு செம டிவிஸ்ட்
- IndiaGlitz, [Saturday,July 15 2023]
கேரளாவில் வசித்துவரும் இளம்பெண் ஒருவர், சிறப்பு திருமணச் சட்டத்தின்கீழ் திருமணம் செய்து கொள்ள விரும்பி சார்பதிவாளர் அலவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். ஆனால் அவர் ஒரே நேரத்தில் இரண்டு விண்ணப்பங்களை அளித்ததோடு இரண்டு வெவ்வேறு வாலிபர்களின் பெயர்களை குறிப்பிட்டு இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.
கேரளாவின் கொல்லம் மாவட்டத்திலுள்ள பத்மநாபபுரம் பகுதியில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர் அதே பகுதியில் லேப் டெக்னீஷியனாக பணியாற்றி வந்துள்ளார். இதையடுத்து அவர் புத்மநாபபுரம் பகுதியிலுள்ள சப்-ரிஜிஸ்டரர் அலுவலகத்தில் சிறப்புத் திருமணச் சட்டத்தின்கீழ் திருமணம் செய்துகொள்ள விரும்பி கடந்த ஜுன் 30 ஆம் தேதி விண்ணப்பித்துள்ளார்.
இப்படி சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் நபர்களின் திருமணத்திற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத பட்சத்தில் ஒரு மாதம் கழித்து அவர்களுக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டு திருமணப்பதிவு சான்றிதழ் வழங்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில் பத்மநாபபுரத்தைத் தவிர அதே பெண்ணின் பெயரில் புனலூரை சேர்ந்த சப்-ரிஜிஸ்டரர் அலுவலகத்தில் வேறொரு ஆணின் பெயரை குறிப்பிட்டு திருமணம் செய்துகொள்வதற்காக ஜுலை 13 ஆம் தேதி விண்ணப்பம் அளிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அனைத்து விண்ணப்பங்களும் தற்போது ஆன்லைனில் முறையில் பதிவு செய்யப்பட்டு வருவதால் இளம்பெண்ணின் பெயரில் இரண்டு விண்ணப்பங்கள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்து உள்ளனர்.
இதையடுத்து அந்த இளம்பெண்ணின் திருமண விண்ணப்பத்தை புனலூரில் உள்ள அதிகாரிகள் பத்மநாபபுரம் சப்ரிஜிஸ்டர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து அதிகாரிகள் பத்மநாபபுரம் அலுவகத்திற்கு வருமாறு உத்தரவிட்டுள்ளனர்.
இந்நிலையில் புனலூர் விண்ணப்பத்தில் குறிபிடப்பட்டு இருந்த வாலிபருடன் அந்த இளம்பெண் பத்மநாபபுரத்திற்கு வருகை தந்துள்ளார். மேலும் அங்கு நடத்தப்பட்ட விசாரணையில் ஏற்கனவே புனலூர் இளைஞருடன் அவர் லிவ்இன் முறையில் நீண்ட நாட்களாக வாழ்ந்து வந்ததாகவும் சமீபத்தில் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்போது தனது தாயுடன் வசிப்பதற்காக பத்பநாபபுரத்திற்கு வந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.
தற்போது பத்மநாபபுரத்தில் வசித்துவந்த நிலையில் அங்குள்ள ஒரு இளைஞருடன் பழகி வந்த நிலையில் அந்த இளைஞர் தன்னிடம் வெற்று தாளில் கையொப்பம் வாங்கிக்கொண்டு அந்த தாளை வைத்து திருமணத்திற்கு விண்ணப்பித்து விட்டார் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
இந்த விளக்கத்தை கேட்ட அதிகாரிகள் அந்த இளம் பெண்ணின் மீது மேலும் சந்தேகம் அடைந்த நிலையில் வெவ்வேறு தேதிகளில் இரு வீட்டாரின் பெற்றோரையும் அழைத்துக் கொண்டு வருமாறு உத்தரவிட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.