பிளாஸ்டிக் கவரில் எச்சில் துப்பி வீடுகளுக்குள் வீசிய மர்ம பெண்: சிசிடிவி வீடியோவால் பரபரப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக மிக வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனா வைரஸிலிருந்து மக்களை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. கோடிக்கணக்கான பணம் செலவழிப்பது மட்டுமின்றி 24 மணி நேரமும் அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், நர்ஸ்கள், காவல்துறையினர், சுகாதாரத்துறை அதிகாரிகள், தூய்மை பணியாளர்கள் உள்பட பலர் கொரோனா வைரசுக்கு எதிராக போராடி வருகின்றனர்

இந்த நிலையில் ஒரு சிலர் வேண்டுமென்றே கொரோனா வைரஸை மக்களிடம் பரப்பும் பணியில் ஈடுபட்டுள்ள சம்பவம் தற்போது வெளிவந்துள்ளது. ராஜஸ்தானை சேர்ந்த மர்ம பெண் ஒருவர் பிளாஸ்டிக் பைகளில் எச்சில் துப்பி அதை வீடுகளுக்குள் வீசி சென்ற சிசிடிவி வீடியோ காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

ராஜஸ்தான் மாநிலம் மாவட்டம் வல்லப்வாடி என்ற பகுதியில் ஒரு மர்மப் பெண் பிளாஸ்டிக் கவர்களில் எச்சில் துப்பி வரிசையாக வீடுகளுக்குள் வீசி எறிந்தது சிசிடிவி கேமரா மூலம் தெரியவந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக அந்த பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளித்து தூய்மைபடுத்த ஏற்பாடு செய்தனர். மேலும் பிளாஸ்டிக் கவர்களில் எச்சில் துப்பி வீடுகளுக்குள் தூக்கி வீசிய மர்ம பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது