பிரபல நடிகை போல் மாற 15 சர்ஜரி, 48 லட்சம் செலவு செய்த இளம்பெண்!

  • IndiaGlitz, [Friday,August 12 2022]

பிரபல நடிகை போல மாறுவதற்கு இளம்பெண் ஒருவர் 15 அறுவை சிகிச்சைகள் செய்து 48 லட்சம் செலவு செய்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல ஹாலிவுட் நடிகை கிம் கர்தஷியான் போல் மாறுவதற்கு பல இளம்பெண்கள் சர்ஜரி செய்தார்கள் என இதற்கு முன் பல செய்திகள் வெளியானது. அந்த வகையில் தென் கொரியாவைச் சேர்ந்த 28 வயது இளம்பெண் செர்ரி லீ என்பவர், கிம் கர்தாஷியனை போல் மாறுவதற்காக தனது 20 வயதிலிருந்து 15 முறை சர்ஜரி செய்து இருப்பதாகவும் இதற்காக அவர் 48 லட்ச ரூபாய் செலவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

உலகின் மிக அழகான பெண் கிம் கர்தாஷியன் என்றும் அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றும் அவரது ரசிகை என்றும் செர்ரி லீ கூறியுள்ளார். கிம் கர்தாஷியன் போலவே மாறுவதற்கு தான் சிறுவயதில் இருந்தே முயற்சி செய்து வருவதாகவும், இதுவரை 48 லட்ச ரூபாய் செலவு செய்து இருப்பதாகவும், இன்னும் செலவு செய்ய தயாராக இருப்பதாகவும் அவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

பல ஆண்டுகளாக கிம் கர்தாஷியன் ரசிகையாக இருப்பது தனக்கு பெருமை என்று கூறியுள்ள லீ, மூன்று முறை பின்னழகு அறுவை சிகிச்சை, ஒரு கன்ன எலும்பு அறுவை சிகிச்சை, இரண்டு மார்பகங்களையும் பெரிதாக்கும் அறுவை சிகிச்சை மற்றும் முக அறுவை சிகிச்சை ஆகியவைகளை செய்திருப்பதாகவும் முன்பை விட இப்போது தான் மிகவும் அழகாக இருப்பதாகவும் தன்னை ஒரு தென்கொரிய பெண் என்பது யாருக்கும் அடையாளம் தெரியவில்லை என்றும் அது தனக்கு பெருமையாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் அடுத்த கட்ட அறுவை சிகிச்சையை இனிமேல் செய்யமாட்டேன் என்றும் தான் விரும்பிய தோற்றத்தை தற்போது அடைந்து விட்டேன் என்றும் இந்த செயலுக்காக நான் வருத்தப்படவில்லை என்றும் ஒரே ஒரு வருத்தம் என்னவெனில் இதை நான் ஏன் விரைவில் செய்யவில்லை என்பதுதான் என்றும் அவர் கூறியுள்ளார்.

செர்ரி லீ-க்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு எப்படி பணம் வந்தது? அவருடைய பெற்றோர்களின் பின்னணி என்ன என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.