சீறிப்பாய்ந்த சிறுத்தையிடம் தனியாளாகப் போராடி உயிர்பிழைத்த பெண்… அதிர்ச்சி சம்பவம்!!!

  • IndiaGlitz, [Wednesday,January 13 2021]

மேற்கு வங்க மாநிலத்தில் டீ எஸ்டேட்டில் வேலைப் பார்த்து கொண்டிருந்த பெண் ஒருவரை சிறுத்தை ஒன்று சீறிப்பாய்ந்து தாக்கி இருக்கிறது. அந்தச் சிறுத்தையிடம் தனி ஒரு ஆளாக அதுவும் எந்த ஆயுதமும் இன்றி போராடி உயிர் தப்பி இருக்கிறார் ஒரு பெண். இந்தச் சம்பவத்தை அப்பகுதி மக்கள் ஆச்சர்யமாகப் பார்த்து வருகின்றனர்.

ஜால்பாய்குரி எனும் பகுதியில் உள்ள பாத்ஹவா டீ எஸ்டேட்டில் லீலா ஓரன் எனும் பெண்மணி மும்முரமாக வேலைப் பார்த்து வந்தார். அப்போது திடீரென அவர் மீது சிறுத்தை ஒன்று சீரிப்பாய்ந்து இருக்கிறது. இதைச் சற்றும் எதிர்பாராக லீலா அலறி அடித்து அந்த சிறுத்தையிடம் சண்டையிட்டு இருக்கிறார். கை, கால்களை மட்டுமே கொண்டு கிட்டத்தட்ட 10 நிமிடம் அந்த சிறுத்தையிடம் போராடி இருக்கிறார். இந்தச் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்த உறவினர்கள் ஒடிவர அந்த சிறுத்தை காட்டுக்குள் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சிறுத்தையிடம் போராடியதால் காயமடைந்த லீலாவை உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். தற்போது அவர் சிறிய காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. மேற்கு வங்கத்தின் ஜல்பாய்குரி, சிலுகிரி போன்ற பகுதிகளில் அடர்ந்த வனப்பகுதி இருக்கின்றன. இந்த வனப்பகுதியில் உள்ள மிருகங்கள் அடிக்கடி இப்படி மனிதர்களை தாக்குவது வாடிக்கையாகி வருகிறது. ஆனால் தன்மீது தாக்குதல் நடத்திய சிறுத்தையை எதிர்த்துப் போராடி லீலா உயிர் பிழைத்து இருக்கிறார். அவரை அப்பகுதி மக்கள் ஆச்சர்யமாக பார்த்து வருகின்றனர்.

More News

நேற்று சிரிப்பு, இன்று அழுகை: ஹவுஸ்மேட்ஸ்களை அழவைத்த பிக்பாஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் ஹவுஸ்மேட்ஸ்கள் கடந்த 100 நாட்களில் கடந்து வந்த மகிழ்ச்சியான தருணங்களில் சில சில காட்சிகளை பிளாஸ்மா டிவியில் போட்டு காண்பிக்கப்பட்டது

4 பிரிவுகளில் உதயநிதி ஸ்டாலின் மீது பாய்ந்த  வழக்கு… நடந்தது என்ன?

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஆரி வேற மாறி… பிக்பாஸ் ஆரிக்காக ஒரு பாடல்… நட்பு ரீதியில் வெளியான அசத்தல் டிராக்!!!

இசையமைப்பாளர் சி.சத்யா பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு ரசிகர்களின் பேராதரவைப் பெற்றிருக்கும் ஆரிக்காக ஒரு லிரிக்கல் இசை ஆல்பத்தை வெளியிட்டு உள்ளார்.

மாஸ்டர் படம் எப்படி? நடிகர் சூரி கூறிய மாஸ் கருத்து!!!

தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படம் உலகம் முழுவதும் இன்று திரைக்கு வந்து உள்ளது.

சொந்தச் செலவில் சூனியம் வைத்தக்கொண்ட திருடர்கள்… வகையாக மாட்டிக்கொண்ட சம்பவம்!!!

நம்மூர் திருடன்மார்கள், திருடப் போன இடத்தில் தோசை ஊற்றி சாப்பிடுவது, டிவி பார்ப்பது போன்ற விசித்திர செயல்களை செய்து செய்து அவ்வபோது சிரிப்பை வரவழைத்து வருகின்றனர்.