சீறிப்பாய்ந்த சிறுத்தையிடம் தனியாளாகப் போராடி உயிர்பிழைத்த பெண்… அதிர்ச்சி சம்பவம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
மேற்கு வங்க மாநிலத்தில் டீ எஸ்டேட்டில் வேலைப் பார்த்து கொண்டிருந்த பெண் ஒருவரை சிறுத்தை ஒன்று சீறிப்பாய்ந்து தாக்கி இருக்கிறது. அந்தச் சிறுத்தையிடம் தனி ஒரு ஆளாக அதுவும் எந்த ஆயுதமும் இன்றி போராடி உயிர் தப்பி இருக்கிறார் ஒரு பெண். இந்தச் சம்பவத்தை அப்பகுதி மக்கள் ஆச்சர்யமாகப் பார்த்து வருகின்றனர்.
ஜால்பாய்குரி எனும் பகுதியில் உள்ள பாத்ஹவா டீ எஸ்டேட்டில் லீலா ஓரன் எனும் பெண்மணி மும்முரமாக வேலைப் பார்த்து வந்தார். அப்போது திடீரென அவர் மீது சிறுத்தை ஒன்று சீரிப்பாய்ந்து இருக்கிறது. இதைச் சற்றும் எதிர்பாராக லீலா அலறி அடித்து அந்த சிறுத்தையிடம் சண்டையிட்டு இருக்கிறார். கை, கால்களை மட்டுமே கொண்டு கிட்டத்தட்ட 10 நிமிடம் அந்த சிறுத்தையிடம் போராடி இருக்கிறார். இந்தச் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்த உறவினர்கள் ஒடிவர அந்த சிறுத்தை காட்டுக்குள் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சிறுத்தையிடம் போராடியதால் காயமடைந்த லீலாவை உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். தற்போது அவர் சிறிய காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. மேற்கு வங்கத்தின் ஜல்பாய்குரி, சிலுகிரி போன்ற பகுதிகளில் அடர்ந்த வனப்பகுதி இருக்கின்றன. இந்த வனப்பகுதியில் உள்ள மிருகங்கள் அடிக்கடி இப்படி மனிதர்களை தாக்குவது வாடிக்கையாகி வருகிறது. ஆனால் தன்மீது தாக்குதல் நடத்திய சிறுத்தையை எதிர்த்துப் போராடி லீலா உயிர் பிழைத்து இருக்கிறார். அவரை அப்பகுதி மக்கள் ஆச்சர்யமாக பார்த்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com