மனைவியோடு சேர்ந்து கொண்டு பெற்றத் தாயையே தீ வைத்து கொளுத்திய தலைமகன்…

  • IndiaGlitz, [Monday,November 02 2020]

 

உத்திரப் பிரேதேசத்தின் ஜலாலாபாத் எனும் பகுதியில் பெற்ற தாயையே அவரது மகன் தீ வைத்து கொளுத்திய சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இச்சம்பவத்தால் தாக்கப்பட்ட அப்பெண்மணி தற்போது மருத்துவமனையில் கவலை கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

ஆகாஷ் குப்தா என்பவர் தன்னுடைய மனைவி தீப் ஷிகா மற்றும் மாமியாருடன் சேர்ந்து கொண்டு குடும்பத் தகராறு காரணமாக பெற்றத் தாயையே தீ வைத்து கொளுத்தி இருக்கிறார். இந்த விபத்தில் படுகாயமடைந்த ரத்னா தேவி(58) தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.

தீப் ஷிகாவின் குடும்பத்திற்கும் ரத்னா தேவிக்கும் இடையில் ஏற்கனவே குடும்பத் தகராறு இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் மாமியாரின் குடும்பத்தோடு கூட்டுச் சேர்ந்து கொண்டு அவரது மகனான ஆகாஷ் குமார் தாயை தீ வைத்து கொல்ல முயற்சித்து இருக்கிறார். ஆனால் சூடு பொறுக்க முடியாமல் தவித்த ரத்னா தேவியின் அலறைக் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு உள்ளனர். இச்சம்பவத்தால் தற்போது ஆகாஷ் குமார் மற்றும் அவருடைய மாமியார் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

More News

நியூசிலாந்தின் அமைச்சராகப் பொறுப்பு ஏற்று இருக்கும் முதல் இந்தியப் பெண்மணி!!!

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட பெண்மணி ஒருவர் நியூசிலாந்து நாட்டின் அமைச்சாராக பொறுப்பு ஏற்றிருக்கிறார்.

தேனிலவை தள்ளி வைத்த காஜல் அகர்வால்: இதுதான் காரணம்!

பிரபல நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் மும்பையை சேர்ந்த கௌதம் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் அவரது திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே 

அர்ச்சனாவுக்கு வக்காலத்து வாங்கி என்கிட்ட பேசாதே: சம்யுக்தாவை துவம்சம் செய்த ஆரி!

பிக்பாஸ் வீட்டில் ஏற்கனவே பாலாஜி மற்றும் அர்ச்சனாவுக்கு வீட்டை பெருக்கும் பிரச்சனை வெடித்தது என்பதும், அதன்பின் தாய்ப்பாசம் என்ற ஆயுதத்தை பயன்படுத்தி பாலாஜியை அர்ச்சனா

ஒத்தை ஆளாக இருந்து 75 உயிர்களைக் காப்பாற்றிய சிறுவன்… குவியும் பாராட்டு!!!

மகாராஷ்டிராவில் 18 வயது சிறுவன் தனி ஆளாக இருந்து தன்னுடைய பெற்றோர் உட்பட ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 75 நபர்களைக் காப்பாற்றி இருக்கிறான்.

தீபாவளிக்கு 'மாஸ்டர்' இல்லை: பொங்கலுக்காவது வருமா? தயாரிப்பாளர் விளக்கம்

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 7 மாதங்களுக்கு மேல் மூடப்பட்டிருந்த திரையரங்குகள் வரும் 10ஆம் தேதி திறக்க உள்ளன. ஏற்கனவே நாடு முழுவதும் திரையரங்குகள் திறந்து விட்ட