4 குழந்தைகளின் தாயை காதலித்த இளைஞன்! மறுத்ததால் ஏற்பட்ட விபரீதம்!

  • IndiaGlitz, [Wednesday,June 05 2019]

டெல்லியில் நான்கு குழந்தைகளுக்கு தாயான ஒரு பெண்ணை இளைஞர் ஒருவர் காதலித்து வந்தார். ஆனால் அந்த பெண் அந்த காதலை ஏற்க மறுத்ததால் அந்த பெண்ணின் ஒரு குழந்தையை இளைஞர் கடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லியை சேர்ந்த காம்லேஷ் என்ற பெண்ணுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இவர் குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்த நிலையில் இவரது வீட்டிற்கு ஒரு வேலையாக வந்த இளைஞர் ஒருவர் அந்த பெண்ணை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்ய விரும்புவதாகவும் கூறியுள்ளார். ஆனால் காம்லேஷ் அவரை திட்டி விரட்டிவிட்டார்.

இந்த நிலையில் காம்லேஷின் 9 வயது பெண் குழந்தை திடீரென காணாமல் போனார். இதுகுறித்து அந்த பெண் போலீசிடம் புகார் செய்த நிலையில் அந்த பகுதியில் உள்ள சிசிடிவியை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் ஒரு இளைஞர் காணாமல் போன சிறுமியை அழைத்து கொண்டு சென்றது சிசிடிவி வீடியோவில் தெரிந்தது. இதனையடுத்து காம்லேஷை அழைத்து அந்த இளைஞரை தெரியுமா? என போலீசார் கேட்டபோது அந்த இளைஞர்தான் தன்னை காதலிப்பதாக கூறியதாகவும், தான் மறுத்துவிட்டதாக தெரிவித்ததாகவும் கூறினார்.

இதனையடுத்து அந்த இளைஞரின் விபரங்களை சேகரித்த போலீசார் அடுத்த சில மணி நேரங்களில் அவரை கைது செய்ததோடு, கடத்தப்பட்ட சிறுமியையும் மீட்டனர்.

More News

ஒரே நேரத்தில் 2 பெண்களை திருமணம் செய்து வீட்டிற்கு அழைத்து சென்ற ஆட்டோ டிரைவர்

திருமண வயதான பல இளைஞர்களுக்கு ஒரு பெண்ணை தேடி கண்டுபிடித்து திருமணம் செய்யவே போதும் போதுமென்று ஆகிவிடும் நிலையில்

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்: விரக்தியால் திருப்பூர் மாணவி தற்கொலை

மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வின் முடிவுகள் இன்று வெளியான நிலையில் இந்த தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற விரக்தியில் திருப்பூர் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்

ஜப்பானில் படமாகும் ராஜீவ் மேனனின் அடுத்த படம்: ஹீரோ யார்?

பிரபல ஒளிப்பதிவாளர் இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'சர்வம் தாளமயம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்

யோகிபாபுவின் 'ஜாம்பி' டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரபல காமெடி நடிகர் யோகிபாபு முதல்முறையாக முக்கிய வேடத்தில் நடித்த 'தர்மபிரபு' திரைப்படம் இம்மாதம் 28ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில்

தனுஷ்-சினேகா படத்தின் புதிய அப்டேட்!

தனுஷ் நடிப்பில் துரைசெந்தில்குமார் இயக்கி வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.