கணவர் விவாகரத்து செய்த சில நிமிடங்களில் பாலியல் பலாத்காரம் செய்த மாமனார்:
- IndiaGlitz, [Wednesday,November 27 2019]
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 25 வயது பெண் ஒருவரை அவரது கணவர் விவாகரத்து செய்த அடுத்த சில நிமிடங்களில், கணவரின் தந்தை அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி தகவல் தற்போது வெளிவந்துள்ளது
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் என்ற பகுதியை சேர்ந்த 25 வயது பெண் ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்து புகுந்த வீட்டிற்கு சென்றார். அந்த பெண்ணின் மீது ஆரம்பத்தில் இருந்தே அவரது மாமனாருக்கு ஒரு கண் இருந்ததாக தெரிகிறது
இந்த நிலையில் சமிபத்தில் கணவர், மனைவி இருவருக்கும் ஒரு விஷயத்தில் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் கடுமையாக வாக்குவாதம் செய்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த கணவர், தனது மத வழக்கப்படி மனைவியை விவாகரத்து செய்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார்.
மகன் விவாகரத்து செய்த அடுத்த சில நிமிடங்களில் அந்த பெண்ணை அவரது மாமனாரே துப்பாக்கி முனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து தந்தை-மகன் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது