''குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பார்த்தால் குழந்தை பிறக்கும்: வெங்கடேஷ் பட் கூறிய ஆச்சரிய தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
'’குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொடர்ந்து பார்ப்பதால் மன அழுத்தம் குறைந்து தனக்கு குழந்தை பிறந்ததாக ஒரு பெண் கூறினார் என்று '’குக் கோமாளி நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான வெங்கடேஷ் பட் நேற்றைய நிகழ்ச்சியில் கூறினார்.
நேற்றைய நிகழ்ச்சியில் அவர் பேசும்போது தனக்கு ஒரு பெண் மெசேஜ் அனுப்பி இருந்ததாகவும் அந்தப் பெண்ணுக்கு பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த நிலையில் '’குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்ததும் மன அழுத்தம் குறைந்ததாகவும் இதனை அடுத்து தான் கர்ப்பமாகி குழந்தை பெற்றதாகவும் அவர் கூறியிருந்தார். அது மட்டுமின்றி மற்ற குழந்தையில்லாத பெண்களிடமும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பாருங்கள், மனம் விட்டு சிரித்து அழுத்தத்தை குறைத்து கொண்டால் கண்டிப்பாக குழந்தை பிறக்கும் என்று கூறியதாகவும் வெங்கடேஷ் பட் கூறினார்.
அதேபோல் நேற்றைய நிகழ்ச்சியில் கோமாளி புகழ் கூறியபோது ’தனக்கும் ஒரு மெசேஜ் வந்ததாகவும், ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து கயிறு எல்லாம் கட்டி ரெடி செய்த பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் புரமோ வந்ததாகவும் அதை பார்த்த பின் மனம் மாறி தற்கொலை எண்ணத்தை கைவிட்டதாக கூறியிருந்ததாகவும் தெரிவித்தார்.
ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்த அதிசயம் மற்றும் ஒருவர் தற்கொலை முடிவில் இருந்து மாறிய அதிசயம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியால் நிகழ்ந்துள்ளது என்று வெங்கடேஷ் பட் மற்றும் புகழ் கூறியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Before you troll and laugh study abt ivf. People who r taking te treatment need to be stress free n hpy.
— DKN (@DineshK_N) May 28, 2022
This show giving them that, this ia what chef was saying.#CookWithComali3 #CookWithComali pic.twitter.com/h0bsW1mFCK
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com