உலகில் முதல்முறையாக ரோபோ அறுவை சிகிச்சை செய்த பெண்ணுக்கு பிறந்த குழந்தை
- IndiaGlitz, [Tuesday,April 09 2019]
ஸ்வீடன் நாட்டு பெண் ஒருவருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு கருப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையை செய்தது ஒரு ரோபோ என்பது குறிப்பிடத்தக்கது. ரோபோவால் கருப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்த பெண் சமீபத்தில் கர்ப்பமான நிலையில் தற்போது அவர் அழகான ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.
உலகிலேயே ரோபோவால் கருப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்த பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளது இதுதான் முதல் முறை. இந்த பெண் கர்ப்பமான பின்னர் 36 வாரங்கள் கழித்து சிசேரியன் முறையில் குழந்தை பெற்றதாகவும், இந்த குழந்தை 2.9 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சாதனை உலக விஞ்ஞானத்தில் அடுத்த கட்டம் என்றும், இதுவொரு அதிசயமான சாதனை என்றும் இந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த செய்தி உலக ஊடகங்களில் முக்கிய செய்தியாக இடம்பிடித்துள்ளது என்பது குறிப்ப்பிடத்தக்கது