அஜித் செய்வது உதவி.. விஜய் செய்வது பப்ளிசிட்டி.. பெண் அரசியல்வாதி ஆவேசம்..!

  • IndiaGlitz, [Tuesday,February 06 2024]

அஜித் தான் செய்த உதவியை யாருக்கும் தெரியாமல் விளம்பரப்படுத்தாமல் உள்ளார் என்றும், ஆனால் விஜய் பப்ளிசிட்டிக்காக உதவி செய்து வருவதாகவும் பெண் அரசியல்வாதி வீரலட்சுமி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய், அஜித் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் பெண் அரசியல்வாதி வீரலட்சுமி கூறிய போது ’விஜய்க்கு நான் ஏற்கனவே நிறைய கண்டனம் தெரிவித்துள்ளதால் எனக்கு அவரது ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.

சமீப காலத்தில் ஒரு திரைப்படம் பார்க்கும்போது ஒரு தம்பி லாரி மேல் ஏறிய போது கீழே விழுந்து விட்டார். அதற்கு நடிகர் அஜித் ,சினிமாவை சினிமாவாக பாருங்கள், எனக்காக யாரும் உயிரை விட வேண்டாம் என்று தெளிவாக குறிப்பிட்டு இருந்தார்.

என்னை பொருத்தவரை சினிமாவை எல்லோரும் சினிமாவாக பார்க்க வேண்டும், அதிலேயே முழுகி போய் விடக்கூடாது. என்னை பொருத்தவரை நீங்கள் கொடுக்கும் சினிமா டிக்கெட் காசில் தான் நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பாதித்து அதன் பிறகு அந்த பணத்தை பாதுகாக்க அரசியல் கட்சி ஆரம்பிக்கிறார்கள்.

ஆனால் ரசிகர்கள் ஒரு திரைப்படத்தை பார்ப்பதற்காக கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை வீணாக்குகிறார்கள். நடிகரோ, நடிகர் சங்கமோ, ரசிகர்களுக்கு இதுவரை என்ன செய்துள்ளது? ஒருவர் எதிர்பாராத விதமாக விபத்தில் இறந்துவிட்டால் அந்த குடும்பத்திற்கு நாங்கள் உதவி செய்வது போல், நடிகர்கள் எதாவது செய்கிறார்களா?

இனிமேலாவது ரசிகர்கள் என்ற பெயரில் உங்கள் வாழ்க்கையை நீங்கள் கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கிக் கொள்ள வேண்டாம், உங்கள் அம்மா அப்பாவை பொறுப்புடன் கவனித்துக் கொள்ளுங்கள், உங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவருக்காக நீங்கள் தாராளமாக உயிர் தியாகம் செய்யலாம், ஆனால் எவரோ ஒருவருக்காக எதற்காக நீங்கள் உயர்த்த தியாகம் செய்ய வேண்டும்?

அஜித் அவர்கள் தன்னால் முடிந்த உதவியை செய்கிறார், குறிப்பாக சமீபத்தில் ஏற்பட்ட புயலின் போது கூட அவர் உதவி செய்தார், ஆனால் அவர் தனது உதவியை எந்த நேரத்திலும் விளம்பரப்படுத்திக் கொள்வதில்லை. ஆனால் விஜய் ரசிகர்கள் சாப்பாடு போட்டுக் கொண்டிருக்கும் போதே, பக்கத்தில் ஒருவர் போட்டோவை பிடித்துக் கொண்டு விளம்பரம் செய்கிறார். ஒரு கையால் உதவி செய்தால் இன்னொரு கைக்கு கூட அது தெரியாத அளவுக்கு உதவி செய்ய வேண்டும், அதுதான் நமது பண்பாடு, கலாச்சாரம்’ என்று பெண் அரசியல்வாதி வீரலட்சுமி தெரிவித்துள்ளார்.