close
Choose your channels

அடுத்தவர் மனைவியை கர்ப்பமாக்கிய ஜிம் பயிற்சியாளர் திருமண தினத்தில் கைது!

Friday, May 10, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அடுத்தவர் மனைவியை கர்ப்பமாக்கி கைவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற பெங்களூரை சேர்ந்த ஜிம் பயிற்சியாளர் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

பெங்களூரில் கவுதம் என்பவர் ஜிம் நடத்தி வருவதோடு அதன் பயிற்சியாளராகவும் இருந்து வருகிறார். அந்த ஜிம்மில் உடற்பயிற்சிக்காக வந்த இளம்பெண் ஒருவருக்கும் கவுதமுக்கும் நெருக்கம் ஏற்பட்டது. அந்த இளம்பெண் திருமணமாகி கருத்துவேறுபாடால் கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதை தெரிந்து கொண்ட கவுதம், அப்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி வலை விரித்துள்ளார்.

இந்த வலையில் சிக்கிய அந்த இளம்பெண் சில நாட்களில் கர்ப்பமானார். இதனையடுத்து அந்த இளம்பெண்ணிடம் இருந்து விலக முயற்சித்த கவுதம் ஒரு கட்டத்தில் வீட்டில் பார்த்த பெண்ணை திருமணம் செய்ய முயற்சித்துள்ளார். இந்த நிலையில் திருமண தினத்தன்று காவல்துறை அதிகாரிகளுடன் வந்த இளம்பெண் திருமணத்தை நிறுத்தி தனது கர்ப்பத்திற்கு பதில் சொல்லுமாறு கேள்வி எழுப்பியுள்ளார். இதனையடுத்து கவுதமையும் அவரது தந்தையையும் கைது செய்த பெங்களூர் போலீசார் இருவரிடமும் விசாரணை செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment