குழந்தையின் சிகிச்சைக்காக இதயத்தை விற்க முன்வந்த தாய்! அதிர்ச்சி அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
கொச்சியை சேர்ந்த ஒரு பெண் தனது குழந்தையின் சிகிச்சைக்காகவும், வாங்கிய கடனை அடைப்பதற்காகவும் தனது இதயம் உள்பட அனைத்து உடல் உறுப்புகளையும் விற்க முன்வந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொச்சியை சேர்ந்த சாந்தி என்ற பெண் அந்நகரின் முக்கிய பகுதியில் இது குறித்து அவர் பலகை ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதில் எனது குழந்தைகளுக்கு மருத்துவ வசதி செய்ய பணவசதி இல்லாததாலும், வாங்கிய கடன்களை அடைக்கவும் உடல் உறுப்புகளை விற்பனை செய்ய முன் வந்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இவரது மூத்த மகன் சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது பார்வையும் பாதித்து உள்ளதாகவும் அவரது சிகிச்சைக்குத் தேவையான பணத்தை திரட்டவே அவது தாய் சாந்தி தனது உடல் உறுப்புகளை விற்கும் முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கணவனை பிரிந்து வாழும் இவர் கொச்சியின் புறநகரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார் என்றும், தொடர்ந்து வாடகை செலுத்த முடியவில்லை என்றும் கடன் மேல் கடன் ஆகி விட்டதால் இதயம் உள்பட உடல் உறுப்புகள் அனைத்தியும் விற்கும் முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தனக்கு வேறு வழி இல்லை என்றும் அதனால்தான் இத்தகைய பலகையை வைத்து தன்னுடைய உடல் உறுப்பை விற்க முன் வந்தேன் என்றும் இது யாருக்கும் எதிரான போராட்டம் இல்லை என்றும் உதவிக்காக தான் இந்த பலகையை வைத்து உள்ளேன் என்று சாந்தி கூறியுள்ளார்.
இது குறித்து கேரள அரசின் கவனத்திற்கு வந்தவுடன் அவரது குடும்பம் காப்பகத்துக்கு மாற்றப்பட்டதாகவும் அவரது குழந்தையின் சிகிச்சையை அரசே கவனித்துக் கொள்ளும் என்றும் உறுதி அளித்ததாகவும் தெரிகிறது. மேலும் சில தன்னார்வ அமைப்புகளும் சாந்தி குழந்தையின் சிகிச்சைக்கு உதவ முன்வந்துள்ளது வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com