கொரோனா நிதியாக 2 பவுன் தங்கச்சங்கிலி கொடுத்து முதல்வருக்கு நெகிழ்ச்சியான கடிதம் எழுதிய பெண்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா நிதியாக தனது திருமணத்திற்கு வைத்திருந்த இரண்டு பவுன் தங்கச்சங்கிலியை கொடுத்துவிட்டு நெகிழ்ச்சியான கடிதம் எழுதிய பெண் குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: தனது தந்தை ஓய்வு பெற்றவர் என்றும் அவருக்கு மூன்று பெண்களில் இருக்கிறோம் என்றும் மூன்று பேரும் பட்டதாரியாக இருந்தும் வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் தனது தந்தை பணி ஓய்வு பெறுவதற்கு முன்பே தனது இரண்டு சகோதரிகளுக்கும் திருமணம் ஆகி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் பணி ஓய்வு பெற்ற பின் தனது அம்மாவுக்கு உடல் நலக் குறைவு காரணமாக சுமார் 13 லட்சம் செலவு செய்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை என்றும் தந்தையின் பணி ஓய்வுக்குப் பின் கிடைத்த பணம் முழுவதும் அம்மாவின் மருத்துவச் செலவு ஆகி விட்டதால் தற்போது அவருக்கு வரும் ஓய்வூதிய தொகை ரூ.7000 வைத்து தானும் தனது தந்தையும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் அதில் ரூபாய் 3000 வீட்டு வாடகைக்கு செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்
தன்னுடைய திருமணமான சகோதரரிகள் தங்களுக்கு உதவி செய்கிற வாய்ப்பு இல்லை என்றும் அதனால் மிகுந்த சிரமப்பட்டு வருவதாகவும் இதனை அடுத்து தன்னுடைய தகுதிக்குத் தக்கவாறு ஒரு வேலை கிடைத்தால் நன்றியுடன் இருப்பேன் என்றும் கூறியுள்ளார். தனக்கு அரசு வேலை வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இல்லை என்றும் தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு கிடைத்தால் கூட போதும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த கடிதத்தை படித்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: மேட்டூர் அணையைத் திறக்கச் சென்றபோது பெறப்பட்ட மனுக்களில் சகோதரி சௌமியாவின் இக்கடிதம் கவனத்தை ஈர்த்தது. பேரிடர் காலத்தில் கொடையுள்ளத்தோடு உதவ முன்வந்த அவரது எண்ணம் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது. பொன்மகளுக்கு விரைவில் அவரது படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதனால் விரைவில் அந்த பெண்ணுக்கு நல்ல வேலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேட்டூர் அணையைத் திறக்கச் சென்றபோது பெறப்பட்ட மனுக்களில் சகோதரி சௌமியாவின் இக்கடிதம் கவனத்தை ஈர்த்தது.
— M.K.Stalin (@mkstalin) June 13, 2021
பேரிடர் காலத்தில் கொடையுள்ளத்தோடு உதவ முன்வந்த அவரது எண்ணம் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது.
பொன்மகளுக்கு விரைவில் அவரது படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். pic.twitter.com/Ioqt6dq5YU
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments