ரெயில்வே டிராக்கில் அன்னை இறந்தது தெரியாமல் பால் குடிக்கும் குழந்தை: அதிர்ச்சி புகைப்படம்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பீகாரில் ரயில்வே நிலையம் ஒன்றில் அன்னை இறந்தது கூட தெரியாமல் அவரை எழுப்பும் முயற்சியில் ஈடுபட்ட குழந்தை ஒன்றின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் ரயிலில் இருந்து கீழே விழுந்த அன்னை இறந்தது கூட தெரியாமல் அவரிடம் பால் குடிக்க முயற்சிக்கும் குழந்தை ஒன்றின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இளம் பெண் ஒருவர் தனது குழந்தையுடன் ரயிலில் சென்றுக் கொண்டிருந்தார். அவர் எதிர்பாராத வகையில் தனது குழந்தையுடன் ரயிலில் இருந்து கீழே விழுந்து விட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த போதிலும் தனது மகனுக்கு அவர் பிஸ்கட் பிஸ்கட் பாக்கெட்டை எடுத்து கொடுத்து சாப்பிட கூறியதாகவும், தாய்ப்பால் கொடுக்க முயற்சித்தாகவும் இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினார்.
இந்த நிலையில் அதன் பின் அவர் சிறிது நேரத்தில் இறந்துவிட்டார். ஆனால் அன்னை இறந்தது கூட தெரியாமல் அவரது மார்பில் பால் குடிக்க முயற்சித்த குழந்தையின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதனை அடுத்து ரயில்வே அதிகாரிகள் அந்த பெண்ணின் உடலை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்
இந்த சம்பவத்தில் அந்த பெண் இறந்ததை விட ஒரு மிகப்பெரிய கொடுமை என்னவெனில் கீழே விழுந்ததால் காயமடைந்த குழந்தையை அரசு மருத்துவமனையில் சேர்க்க மருத்துவமனை ஊழியர்கள் மறுத்துள்ளனர். காரணம் அந்த குழந்தை அட்மிஷன் கட்டணமாக ரூபாய்.10 செலுத்தவில்லை என்று மருத்துவமனை ஊழியர்கள் கூறினார்களாம். தாயை இழந்து தவிக்கும் பச்சிளங்குழந்தையிடம் கூட மனிதத் தன்மையே இல்லாமல் 10 ரூபாய் அட்மிஷன் கட்டணம் கேட்ட மருத்துவமனை ஊழியர்களுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout