அல்லாவின் மகிழ்ச்சிக்காக 6 வயது மகனை நரபலி கொடுத்தேன்… படித்த பெண் ஆசிரியரால் அதிர்ச்சி!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் படித்த கல்லூரி பேராசிரியர்களே தங்களுடைய 2 மகள்களை நரபலி கொடுத்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் அதுவும் இளம்பெண் தான் பெற்ற மகனையே கழுத்தை அறுத்து நரபலி கொடுத்தச் சம்பவம் தற்போது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மதரசா பள்ளியில் பணிபுரிந்து வரும் 30 வயது பெண் ஆசிரியர் ஷாஹிதா. இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். மேலும் 3 மாதம் கர்ப்பமாகவும் இருந்து இருக்கிறார். இந்நிலையில் நேற்றுகாலை தன்னுடைய 6 வயதான 3 ஆவது மகனை கழுத்தை அறுத்து படுகொலை செய்துவிட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்து உள்ளார். நேற்று அதிகாலை 3-4 மணிக்கு ஜனமைத்ரி காவல் நிலையத்திற்கு வந்த அழைப்பில், நான் என்னுடைய 6 வயது மகனை கழுத்தை அறுத்து கொலை செய்து குளியல் அறையில் போட்டு விட்டேன் எனக் கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ந்துபோன போலீசார் உடனே விரைந்து அவரது வீட்டிற்கு சென்று உள்ளனர். ஆனால் ஷாஹிதா போலீசாருக்காக வீட்டு வாசலிலேயே காத்து இருக்கிறார். உள்ளே சென்ற போலீசார் கழுத்து அறுக்கப்பட்டு ரத்தம் சிந்தி கிடந்த 6 வயது மகனின் உடலை மீட்டு உள்ளனர். ஆனால் இந்தப் படுகொலை நடந்த விஷயமே தெரியாமல் ஷாஹிதாவின் கணவரும் அவருடைய முதல் 2 குழந்தைகளும் பக்கத்து அறையில் உறங்கி கொண்டு இருந்தனர் என்றும் விசாரணையில் கூறப்படுகிறது.
மேலும் ஷாஹிதாவிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் அல்லாவின் மகிழ்ச்சிக்காக எனது 6 வயது மகனை நரபலி கொடுத்து விட்டேன் எனக் கூறியிருக்கிறார். இச்சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் படித்தவர்களே இப்படி முட்டாள்தனமான விஷயங்களை நம்புவது குறித்து சமூக ஆர்வலர்கள் கடும் அதிர்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com