கள்ளக்காதலனின் உதவியால் அக்காவை கொலை செய்த கொடூர தங்கை

  • IndiaGlitz, [Saturday,March 24 2018]

அக்கா கணவரின் சொத்துக்களை அடைய அக்காவை கொலை செய்ய கள்ளக்காதலனை ஏவிவிட்ட தங்கை ஒருவரின் வெறிச்செயல் திருப்பூர் பகுதியை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரில் தனியார் பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரியும் பூபாலன் என்பவர் தனது மனைவி நதியா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் நதியாவின் ஒன்றுவிட்ட தங்கை ரேகா, கணவர் கஜேந்திரனை பிரிந்துவிட்டதால் அவருக்கு உதவி செய்ய கணவரிடம் பணம் கொடுத்து ரேகாவிடம் கொடுக்க நதியா அனுப்பி வைத்துள்ளார்.

உதவி செய்ய வந்த அக்காள் கணவரை வளைத்து போட திட்டமிட்ட ரேகா, தனது அழகினாலும் கவர்ச்சியாலும் பூபாலனை கையில் போட்டு கொண்டார். மேலும் ஏற்கனவே ரேகாவுக்கு நாகராஜ் என்ற கள்ளக்காதலன் இருப்பதாகவும் இதனை அறிந்துதான் ரேகாவின் கணவர் கஜேந்திரன் பிரிந்து சென்றதாகவும் கூறப்படுகிறது. இதனை கஜேந்திரன் பேனா கேமிராமூலம் கையும் களவுமாக அறிந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஒருநாள் பூபாலனுடன் அவரது மகளும் ரேகாவின் வீட்டுக்கு செல்ல, ரேகாவின் கணவர் கஜேந்திரன் மறைத்து வைத்திருந்த பேனா கேமிராவை அவரது மகள் எடுத்து வந்து நதியாவிடம் கொடுத்துள்ளார். நதியா அதை கம்ப்யூட்டரில் போட்டு பார்க்கும்போது தனது கணவரும் இன்னொரு இளைஞரும் ரேகாவுடன் தகாத உறவு வைத்திருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நதியா, ரேகாவை கண்டித்துள்ளார். மேலும் பேனா கேமிராவை போலீசிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

தனது ரகசியங்களை தெரிந்து கொண்ட நதியாவை கொலை செய்ய திட்டமிட்ட ரேகா, தனது கள்ளக்காதலன் ஏவிவிட்டு கடந்த 16ஆம் தேதி கொலை செய்துள்ளார். இந்த கொலையில் நதியாவின் ஐந்து பவுன் தங்கச்சங்கிலி திருடுபோனதால் இது நகைக்காக நடந்த கொலை என்று முதலில் போலீசார் அந்த கோணத்தில்  விசாரணை செய்தனர். பின்னர் தனிப்படையினர் தீவிரமாக விசாரணை செய்ததில் ரேகாவின் மீது சந்தேகப்பார்வை விழுந்தது. பின்னர் அவரை போலீஸ் பாணியில் விசாரணை செய்தபோது ரேகா, கள்ளக்காதலனை ஏவி நதியாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். பின்னர் ரேகா, நாகராஜன் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தகாத உறவு, சொத்தை அடைய ஆசை போன்ற தீய எண்ணத்தால் தற்போது ரேகாவின் குழந்தைகளும் நதியாவின் குழந்தைகளும் தாயில்லாமல் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற தகாத உறவு, கள்ளக்காதல், சொத்துக்காக கொலை செய்தல் போன்ற எண்ணங்கள் பெண்கள் மனதில் தோன்ற தொலைக்காட்சி சீரியல்கள் ஒரு முக்கிய காரணம் என்றும், எனவே தொலைக்காட்சி சீரியல்களுக்கும் சென்சார் செய்ய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

More News

உதவியாளர் சம்பளம்: சூர்யா-விஷால் எடுத்த அதிரடி முடிவுக்கு வரவேற்பு

ஒட்டுமொத்த திரையுலகமும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில் தயாரிப்பாளர்களின் பிரச்சனைகளை தீர்க்க தினமும் ஒரு சங்கத்திடம் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.

ரஜினி-கார்த்திக் சுப்புராஜ் சந்திப்பில் நடந்த முக்கிய ஆலோசனை என்ன?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தை இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள நிலையில் நேற்று ரஜினியின் அழைப்பை ஏற்று கார்த்திக் சுப்புராஜ்,

லாலு பிரசாத் யாதவுக்கு எத்தனை ஆண்டுகள் தண்டனை: நீதிமன்றம் அறிவிப்பு

முன்னாள் பீகார் முதல்வர் லாலுபிரசாத் யாதவ் மீதான மூன்று கால்நடை தீவன வழக்கில் ஏற்கனவே தீர்ப்பு அளிக்கப்பட்டு அவர் சிறையில் இருக்கும் நிலையில்

சிஸ்டம் புரியாதவர், கருத்து கந்தசாமி: ரஜினி, கமலை மறைமுகமாக தாக்கிய ஓபிஎஸ்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடல்நலம் காரணமாக தமிழகத்தில் சக்தி வாய்ந்த தலைவர்கள் இல்லாத வெற்றிடம் இருப்பதாக கூறப்படுகிறது

அப்பல்லோ பிரதாப் ரெட்டி மருத்துவமனையில் அனுமதி

அப்பல்லோ மருத்துவமனை குழுவின் தலைவர் பிரதாப் ரெட்டிக்கு திடீரென நேற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவருடைய அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.