டெல்லி ஓட்டலில் திருமணமான இளம்பெண் படுகொலை! ஃபேஸ்புக் காதலன் காரணமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
டெல்லி ஹோட்டல் ஒன்றில் திருமணமான இளம் பெண் மர்மமான முறையில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது அந்த பகுதியில் உள்ளவர்களை பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
டெல்லியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் சமீபத்தில் திருமணம் ஆகி, வேலை நிமித்தம் காரணமாக அவர் தனியாக தங்கி பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் 21வயது விக்கி என்பவருடன் பேஸ்புக் மூலம் அவருக்கு நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் விரிவாகி இருவரும் ஒரே அறையில் தங்கி தங்கள் நட்பை வளர்த்துக் கொண்டனர்.
இந்த நிலையில் விக்கியின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்த அந்த இளம்பெண் டெல்லி ஹோட்டல் ஒன்றில் அறை புக் செய்துள்ளார். அந்த அறையில் இருவரும் பிறந்த நாளை கொண்டாடி விட்டு மது அருந்தியுள்ளனர். ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த விக்கி, அந்த இளம் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு மாயமாகிவிட்டார்.
மறுநாள் காலையில் ஓட்டல் ஊழியர் ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் விரைந்து வந்து இளம் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது மரணம் குறித்து அவரது குடும்பத்தினருக்கும் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து வரும் போலீசார் தலைமறைவான வெற்றியை தேடி வருகின்றனர்.
திருமணமான ஒரு பெண்ணுக்கு பேஸ்புக்கில் ஏற்பட்ட நட்பு, நட்பையும் தாண்டி விபரீதம் ஆனதால் அவரது உயிரே பலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com