இரண்டு தலை, மூன்று கைகளுடன் பிறந்த குழந்தை: பெற்றோர் அதிர்ச்சி
Send us your feedback to audioarticles@vaarta.com
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் டெலிவரிக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த பெண்ணூக்கு பிறந்த குழந்தைக்கு இரண்டு தலைகள் மற்றும் மூன்று கைகள் இருந்ததால் மருத்துவர்களும் குழந்தையின் பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயது பபிதா என்ற பெண் சமீபத்தில் கர்ப்பமாக இருந்த நிலையில் அவர் கடந்த ஞாயிறு அன்று டெலிவரிக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் கர்ப்பகாலத்தில் குழந்தை எப்படி இருக்கின்றது என்பதை ஸ்கேன் எடுத்து பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று பபிதாவுக்கு குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தை இரண்டு தலைகள் மற்றும் மூன்று கைகளுடன் இருந்ததால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் குழந்தைக்கு ஒரு இதயம் மட்டுமே இயங்கிக் கொண்டிருப்பதாகவும், குழந்தையின் பாதுகாப்பு கருதி தற்போது அந்த குழந்தை இண்டன்சிவ் கேர் யூனிட்டில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் குழந்தைக்கு ஒரு தலை மற்றும் ஒரு கையை சர்ஜரி செய்வது அகற்றுவது குறித்து மருத்துவர்கள் ஆலோசனை செய்து வருவதாகவும் விரைவில் பெற்றோர்களுடன் கலந்து மருத்துவர்கள் இதுகுறித்து முடிவெடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இரண்டு தலைகள் மூன்று கைகளுடன் குழந்தை பிறந்ததை அறிந்த அந்த பகுதி மக்கள் அந்த குழந்தையை பார்க்க மருத்துவமனை முன் குவிந்து இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments