கர்ப்பமாகி ஒரே மணி நேரத்தில் குழந்தை பெற்ற பெண்: ஆச்சரியத்தில் உறவினர்கள்

  • IndiaGlitz, [Wednesday,July 22 2020]

கர்ப்பமான ஒரு மணி நேரத்தில் பெண் ஒருவர் குழந்தை பெற்ற அதிசய சம்பவம் அவரது உறவினர்களை அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளித்துள்ளது

இந்தோனேசியாவை சேர்ந்த வெஸ்ட்ஜவா என்ற பகுதியில் 28 வயது பெண் நெனி நுரானி. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இவருக்கு திடீரென குழந்தை பிறந்தது. குழந்தை பிறப்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னர்தான் இவருக்கு, தான் கர்ப்பம் என தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து நேனிநுரானி கூறியபோது ’நான் வீட்டில் எப்பொழுதும் போல் சாதாரணமாகத்தான் இருந்தேன். எனக்கு ஒவ்வொரு மாதமும் தவறாமல் மாதவிடாயும் வந்து கொண்டிருந்தது. குழந்தை பிறப்பதற்கு சிலமணி நேரத்திற்கு முன்னர் கூட எனக்கு மாதவிடாய் வந்தது. இந்த நிலையில் திடீரென எனது வயிற்றில் ஏதோ அசைவது போல் தெரிந்தவுடன் உடனே அம்மா வீட்டிற்கு போனேன். அம்மா உடனே என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே போன ஒரு மணி நேரத்தில் எனக்கு குழந்தை பிறந்து விட்டது. இது எப்படி என்பது எனக்கே ஆச்சரியமாக உள்ளது என்று கூறினார்

இதுகுறித்து மருத்துவர்கள் கூறும் போது ’25,000 கர்ப்பிணிகளில் ஒருவருக்கு இவ்வாறு நடக்கும். ஒரு சிலர் தான் கர்ப்பமாக இருக்கிறோம் என்பதைக் கூட தெரியாமல் இருப்பார்கள். ஹார்மோன் பிரச்சனையால் கூட இப்படி நடந்து இருக்கலாம். ஆனால் கர்ப்பமாகி ஒரு மணி நேரத்தில் குழந்தை மற்றும் பிரசவம் என்பதெல்லாம் சாத்தியமே இல்லை. இருப்பினும் இயற்கைக்கு மாறான இந்த சம்பவம் ஆச்சரியத்தை தருகிறது என்று கூறியுள்ளனர்

கர்ப்பம் என தெரிந்த ஒரு மணி நேரத்தில் குழந்தை பெற்ற பெண்ணால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது