யானை சிலைக்கு அடியில் மாட்டிக்கொண்ட பெண்: வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Monday,June 24 2019]

கேமிரா செல்போன் அறிமுகமான நாளில் இருந்து செல்பி என்ற வியாதி பலரிடம் தொற்றிக்கொண்டது. விளையாட்டாக எடுக்கும் செல்பிகள் சிலசமயம் விபரீதமாக விலைமதிப்பில்லா பல உயிர்கள் இழக்கப்பட்டுள்ளது என்பது வேதனைக்குரியது ஆகும். செல்பி மட்டுமின்றி ரிஸ்க்கான போஸ்களில் எடுக்கும் பல புகைப்படங்கள் ஆபத்தில் முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் குஜராத்தில் உள்ள ஒரு பழம்பெரும் கோவிலுக்கு வந்த பெண் சுற்றுலா பயணி ஒருவர் அங்கிருந்த யானை சிலையின் நான்கு கால்களுக்கு இடையே இருந்த இடைவெளியில் நுழைந்து புகைப்படம் எடுக்க முயன்றார். ஸ்டைலாக போஸ் கொடுத்து புகைப்படங்கள் எடுத்த பின்னர் அவர் வெளியே வர முயற்சித்தபோது அவரால் வரமுடியவில்லை.

ஒருசில நிமிடங்கள் போராடி அந்த பகுதியில் உள்ளவர்களின் துணையுடன் நீண்ட போராட்டத்திற்கு பின்னரே அவர் வெளியே வந்தார். இதுகுறித்த வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் பலர் இதனை வேடிக்கையாக பார்த்தாலும் சுற்றுலா செல்லுமிடங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றே இந்த வீடியோ உணர்த்துவதாக கூறப்படுகிறது
 

More News

முதல் நாளிலே ஆட்டம், பாட்டம், முத்தம், ரத்தம் ரணகளத்துடன் தொடங்கும் பிக்பாஸ்

பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியவுடன் ஒரு வாரம் கழித்தே சூடு பிடிக்கும். ஆரம்பத்தில் நண்பர்களாக இருக்கும் போட்டியாளர்கள் ஒருவாரம் கழித்தே குரூப்பாக பிரிவது,

முதல் நாளிலேயே ஆரம்பிக்கப்பட்ட ஆர்மி! யாருக்கு தெரியுமா?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக்பாஸ் 3' நிகழ்ச்சி நேற்று முதல் தொடங்கிய நிலையில் நேற்றைய முதல் நாள் நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

பிக்பாஸ் வீட்டில் இருந்த ரஜினி ஓவியம் அகற்றமா? பிரேம்ஜியின் மாஸ் பதில்!

கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்குள் ஒருசில பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். அப்போது பிக்பாஸ் வீட்டை சுற்றிப்பார்த்த பத்திரிகையாளர்கள்,

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் 15 போட்டியாளர்கள் பட்டியல் இதோ:

விஜய் டிவியில் நேற்று முதல் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தனது வீட்டில் தன்னுடைய சிறுவயது அனுபவங்களுடன் தொடங்கி வைத்தார்.

ரஜினி மக்கள் மன்றத்தின் சேவைக்கு பழம்பெரும் அரசியல்வாதி வாழ்த்து!

சென்னையில் கடந்த சில நாட்களாக தண்ணீர்ப்பஞ்சம் தலைவிரித்தாடி வரும் நிலையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என யாரையும் குறை கூறாமல், போராட்டங்கள் நடத்தி மக்களுக்கு இடைஞ்சல் செய்யாமல்,