கர்ப்பத்தின்போதே மீண்டும் கர்ப்பமான இளம்பெண்… அதிசயச் சம்பவம்!

  • IndiaGlitz, [Saturday,April 10 2021]

ஒரு பெண் கருவுற்று இருக்கும்போதே மீண்டும் அப்பெண் கர்ப்பம் கொள்ள முடியும் என்பது பெரும்பாலானவர்களுக்குத் தெரியாத ஒரு தகவல். மேலும் இப்படி ஒரு பெண் தன்னுடைய கர்ப்பக் காலத்தின்போது மீண்டும் கருவுற்றால் பெரும்பாலும் இரண்டாவதாக கர்ப்பம் தரித்த குழந்தை இறந்துவிடுகிற அபாயம் இருப்பதாகவும் மருத்துவ உலகம் குறிப்பிடுகிறது.

இந்நிலையில் இங்கிலாந்து நாட்டின் பாத் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய கர்ப்பக் காலத்தின் போது மீண்டும் கர்ப்பம் தரித்து ஒரே நேரத்தில் இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்த சம்பவம் கடும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ரேபேக்கா ராபர்ட்ஸ் (39) என்பவர் ஏற்கனவே கருவுற்றிருந்த நிலையில் 3 வார இடைவெளிக்குப் பின்பு மீண்டும் கருவுற்றிருக்கிறார். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு ஆண், பெண் என இரு குழந்தைகள் பிறந்து இருக்கிறார்கள்.

மேலும் நோவா, ரோசாலி எனப் பெயர் வைக்கப்பட்ட இரு குழந்தைகளையும் ஒப்பிடும்போது இரண்டாவதாகக் கருவுற்ற குழந்தை உடல் எடை குறைவாக இருந்ததாகவும் அக்குழந்தைக்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது இரு குழந்தைகளும் நலமுடன் இருப்பதாகவும் டிவிட்டரில் கூறப்பட்டு உள்ளது. இந்நிலையில் 3 வார காலத்திற்கு பிறகு மீண்டும் கர்ப்பம் தரித்து இரு குழந்தைகளும் நலமுடன் பிறந்து இருப்பது மருத்துவ உலகில் தற்போது அதிசயமாகப் பார்க்கப்பட்டு வருகிறது. அதோடு 0.3% பெண்களுக்கு மட்டுமே இதுபோன்ற அனுபவம் நடந்து இருப்பதாகவும் மருத்துவ உலகம் குறிப்பிட்டு காட்டி இருக்கிறது.