பத்தே பத்து ஓட்டு மட்டுமே வாங்கி பஞ்சாயத்து தலைவி ஆன பெண்: எப்படி தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் 27, 30 தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட உடன்குடி அருகே உள்ள பிச்சிவிளை என்ற கிராம ஊராட்சியில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் தேர்தலை புறக்கணித்தனர்.
இந்த ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆறு வார்டுகளில் மொத்தம் 785 வாக்காளர்கள் உள்ளனர். இந்த தொகுதி தலித் பிரிவினர்களுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்த தொகுதியில் வெறும் 6 தலித் வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். இந்த நிலையில் ஊராட்சி தலைவர் பதவிக்கு ராஜேஸ்வரி மற்றும் சுந்தராச்சி என்ற இரு தலித் பெண்கள் போட்டியிட்டனர். தேர்தல் வாக்குப்பதிவின்போது அனைத்து சமூக மக்களும் தேர்தலை புறக்கணித்ததால் 6 தலித் வாக்காளர்களும், பிற சமுதாயத்தை சேர்ந்த 7 வாக்காளர்களும் என மொத்தமே 13 வாக்குகள் தான் பதிவாகியது.
பதிவான 13 வாக்குகளில் ஒரு வாக்கு செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டது. மீதி 12 வாக்குகளில் ராஜலட்சுமி 10 வாக்குகளும், சுந்தராச்சி 2 வாக்குகளும் பெற்றதை அடுத்து ராஜலட்சுமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments