5 மாதக் குழந்தையின் தலையில் துப்பாக்கியை வைத்து, தாயை கூட்டுப் பலாத்காரம் செய்த கொடூரம்!!!

  • IndiaGlitz, [Wednesday,August 26 2020]

 

பீகார் மாநிலத்தின் முசாப்பூர் பகுதியில் 5 மாதக் குழந்தையின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டி தாயை கூட்டுப் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. முசாப்பூர் மாவட்டத்தின் கர்ஜா பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் பெண் ஒருவர் தனியாக வசித்து வந்திருக்கிறார். அவரது கணவர் பாட்னாவிற்கு வேலைக்காக சென்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தனியாக வசித்து வந்த திருமணமான பெண்ணை அவளது 5 மாதக் குழந்தையின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டி கூட்டுப்பாலியல் குற்றத்தில் சில இளைஞர்கள் ஈடுபட்டு இருக்கின்றனர்.

இந்தக் குற்றத்தை செய்தவர்கள் அனைவரும் 19-21 வயதுடையவர்கள் என்றும் காவல் துறையினர் சார்பில் தகவல் கூறப்பட்டுள்ளது. கர்ஜா காவல் துறையினர் இந்த வழக்கில் தொடர்புடைய 5 பேர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. வன்முறைக்கு ஆளான பெண்ணிற்கு முறையான சிகிச்சை கொடுக்கப்பட்டதாகவும் கர்ஜா காவல் அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர். தற்போது குற்றவாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது எனவும் கூறப்படுகிறது.

More News

முகமூடியைச் சுத்தப்படுத்துவது எப்படி… சிறந்த வழிமுறைகளைப் பயன்படுத்தி மீண்டும் பயன்படுத்தலாம்!!!

கொரோனா பெருந்தொற்று எப்போது முடிவுறும் என்று கணிக்க முடியாத அளவிற்கு தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

சூர்யா நம் வீட்டு பிள்ளை: ஓடிடி முடிவுக்கு பாரதிராஜா ஆதரவு: 

நடிகர் சூர்யா, தான் நடித்து தயாரித்த 'சூரரைப்போற்று' என்ற திரைப்படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய முடிவு செய்ததை அடுத்து அவரது முடிவுக்கு திரையுலகினர்

தொலைக்காட்சி வழியே கல்வி… கொரோனா காலத்தில் இந்தியாவிற்கே முன்னோடியாக விளங்கும் தமிழக அரசு!!!

கொரோனா ஊரடங்கால் இந்தியா முழுவதும் பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் திறக்கப்படாமல் இருக்கின்றன.

ஆப்கானிஸ்தானில் பிரபல நடிகைமீது துப்பாக்கிச் சூடு!!! பரபரப்பான பின்னணி!!!

கடந்த சில தினங்களுக்கு முன் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பிரபல நடிகை ஒருவர் மீது மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகச் செய்திகள் வெளியாகி இருக்கிறது.

அசால்ட்டாக வேனில் வைத்து 50 மூட்டை குட்கா கடத்தல்!!! சோதனையில் பறிமுதல்!!!

வேலூர் பகுதியில் 50 மூட்டை குட்காவை வேனில் வைத்துக் கடத்தியதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. வேலூர் மாவட்டம்