கொரோனாவால் இறந்துவிட்டதாக நாடகமாடிய கணவன், மனைவியை வெட்டி கூறுபோட்ட கொடூரம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆந்திரா மாநிலம் திருப்பதி அரசு மருத்துவமனைக்கு அருகே அடையாளம் தெரியாத நிலையில் எரிக்கப்பட்ட சடலம் ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சடலம் யாருடையது எனத் தெரியாமல் கடந்த 5 நாட்களாக போலீசார் குழம்பிய நிலையில் தற்போது அதற்கு விடை கிடைத்து இருக்கிறது.
திருப்பதி அடுத்த ராமசமுத்திரம் பகுதியில் வசித்து வந்தவர் புவனேஸ்வரி. சாப்ட்வேர் இன்ஜினியரான இவர் கடந்த இரண்டரை வருடங்களுக்கு முன்பு ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புவனேஸ்வரியின் பெற்றோரை திருப்பதிக்கு வரவழைத்த ஸ்ரீகாந்த், கொரோனா பாதிப்பு ஏற்பட்டு தன் மனைவி இறந்துவிட்டதாக அவர்களிடம் நாடகம் ஆடியிருக்கிறார்.
மேலும் அவர்களை நம்ப வைப்பதற்காக திருப்பதி அரசு மருத்துவமனையின் மார்ச்சுவரிக்குள் நுழைந்து இறந்த உடலைத் தீவிரமாக தேடியும் இருக்கிறார். அங்கு புவனேஸ்வரியின் உடல் இல்லாத நிலையில் மருத்துவர்கள் உடலை எரித்துவிட்டனர் என்றும் கூறி அவர்களை நம்ப வைத்து இருக்கிறார். இதனால் புவனேஸ்வரி இறந்துவிட்டதாக நம்பிய அவரின் பெற்றோர் ஊர் திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் திருப்பதி அரசு மருத்துவமனைக்குப் பின்புறம் வைத்து எரிக்கப்பட்ட சடலத்தைக் குறித்து போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். அந்த விசாரணையின்போது சிசிடிவி கேமரா மற்றும் தொலைபேசி அழைப்புகளை வைத்து ஸ்ரீகாந்த் தனது மனைவியை ஏற்கனவே வீட்டில் வைத்து கொலைசெய்து அவரது உடலை கூறுகூறாக வெட்டியதும் அந்த உடலை ஒரு பெட்டிக்குள் வைத்து எடுத்துவந்து திருப்பதி அரசு மருத்துவமனைக்கு பின்புறம் வைத்து எரித்ததும் தெரியவந்துள்ளது. இதனால் வசமாக சிக்கிய ஸ்ரீகாந்தை தற்போது போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொரோனாவை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு மனைவியின் உடலை எரித்துவிட்டு தப்பலாம் என நினைத்த ஸ்ரீகாந்த் பற்றிய தகவல் தற்போது ஆந்திராவில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments