வெளிநாட்டில் இறந்த கணவர்: ஒரு மாதத்திற்கு பின் கணவர் உடலுடன் சென்னை திரும்பிய இளம்பெண்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒரு மாதத்திற்கு முன் வெளிநாட்டில் மாரடைப்பால் இறந்த கணவரின் உடலுடன் இளம்பெண் ஒருவர் சென்னை திரும்பிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் சென்னையை சேர்ந்த குமார் என்ற 35 வயது இளைஞர் அங்கு உள்ள நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். அவருடன் அவருடைய மனைவியும் கோலம்மாள் என்பவரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 13ஆம் திடீரென குமார் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இந்த நிலையில் அவருடன் தங்கியிருந்த அவரது மனைவி கோலம்மாள் கணவரின் உடலுடன் தாயகம் திரும்ப வழியில்லாமல் தவித்து வந்தார்.
இந்த நிலையில் தற்போது வெளிநாட்டில் உள்ள இந்தியர்களை அழைத்து வர விமானங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் கோலம்மாள் தனது கணவரின் உடலுடன் சென்னை திரும்பியுள்ளார். வெளிநாட்டில் இருந்த அனைவரும் மகிழ்ச்சியாக தாயகம் திரும்பியுள்ள நிலையில் கோலம்மாள் மட்டும் கணவரை இழந்து சோகத்துடன் திரும்பியுள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதுகுறித்து அவர் கூறும்போது ’எனக்கு அவர்தான் அனைத்திற்கும் உறுதுணையாக இருந்தார். அவர் இல்லாமல் இதுவரை நான் எங்குமே தனியாக வெளியே சென்றதில்லை. ஆனால் தற்போது அவர் என்னை விட்டுவிட்டு சென்றுவிட்டார். நான் தனியாக பயணம் செய்யும் முதல் பயணம் இது தான். அவரது உடலை எப்படியாவது சொந்த ஊருக்கு கொண்டுவர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன் அதன்படி தற்போது அவரை சொந்த வீட்டிற்குக் கொண்டு வந்து விட்டேன். இதுபோன்ற விதி எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது என்று கதறி அழுதபடி கூறியது கல் நெஞ்சையும் கரைய வைக்கும் வகையில் இருந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com