வெளிநாட்டில் இறந்த கணவர்: ஒரு மாதத்திற்கு பின் கணவர் உடலுடன் சென்னை திரும்பிய இளம்பெண் 

  • IndiaGlitz, [Monday,May 11 2020]

ஒரு மாதத்திற்கு முன் வெளிநாட்டில் மாரடைப்பால் இறந்த கணவரின் உடலுடன் இளம்பெண் ஒருவர் சென்னை திரும்பிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் சென்னையை சேர்ந்த குமார் என்ற 35 வயது இளைஞர் அங்கு உள்ள நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். அவருடன் அவருடைய மனைவியும் கோலம்மாள் என்பவரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 13ஆம் திடீரென குமார் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இந்த நிலையில் அவருடன் தங்கியிருந்த அவரது மனைவி கோலம்மாள் கணவரின் உடலுடன் தாயகம் திரும்ப வழியில்லாமல் தவித்து வந்தார்.

இந்த நிலையில் தற்போது வெளிநாட்டில் உள்ள இந்தியர்களை அழைத்து வர விமானங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் கோலம்மாள் தனது கணவரின் உடலுடன் சென்னை திரும்பியுள்ளார். வெளிநாட்டில் இருந்த அனைவரும் மகிழ்ச்சியாக தாயகம் திரும்பியுள்ள நிலையில் கோலம்மாள் மட்டும் கணவரை இழந்து சோகத்துடன் திரும்பியுள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதுகுறித்து அவர் கூறும்போது ’எனக்கு அவர்தான் அனைத்திற்கும் உறுதுணையாக இருந்தார். அவர் இல்லாமல் இதுவரை நான் எங்குமே தனியாக வெளியே சென்றதில்லை. ஆனால் தற்போது அவர் என்னை விட்டுவிட்டு சென்றுவிட்டார். நான் தனியாக பயணம் செய்யும் முதல் பயணம் இது தான். அவரது உடலை எப்படியாவது சொந்த ஊருக்கு கொண்டுவர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன் அதன்படி தற்போது அவரை சொந்த வீட்டிற்குக் கொண்டு வந்து விட்டேன். இதுபோன்ற விதி எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது என்று கதறி அழுதபடி கூறியது கல் நெஞ்சையும் கரைய வைக்கும் வகையில் இருந்தது.

More News

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம்: மீண்டும் சென்னையில் 500க்கும் மேல்!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 500க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிப்பு அடைந்து வரும் நிலையில் இன்று மட்டும் தமிழகத்தில் கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை

தனுஷ் நாயகியின் காதலர் இவர்தான்: வெளியானது புகைப்படம்

தனுஷ் நடித்த 'ஆடுகளம்' என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நடிகை டாப்சி அதன்பின் ஒரு அஜித் நடித்த 'ஆரம்பம்' உள்பட ஒருசில தமிழ் படங்களிலும் ஒரு சில தெலுங்கு படங்களிலும் நாயகியாக நடித்தார்.

லாக்டவுன் தளர்வில் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணியை ஆரம்பித்த முதல் தமிழ் திரைப்படம்

கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் தற்போது மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17ம் தேதி வரை அமலில் உள்ளது.

இந்திய ஐ.ஐ.டி நிறுவனம் உருவாக்கிய கொரோனா பாதிப்பை அளவிடும் மாதிரி அட்டவணை !!!

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு விகிதங்களை அளவிடுவதற்காக ஒரு புதிய அட்டவணை மாதிரியை குவஹாட்டியில் உள்ள ஐ.ஐ.டி நிறுவனம் தாயாரித்து வெளியிட்டு இருக்கிறது

ஜுபிடர் கிரகத்தின் புதிய புகைப்படத்தை உருவாக்கிய விஞ்ஞானிகள்!!!

சூரிய மண்டலத்திலேயே மிகப்பெரிய கிரகமாக அறியப்படுவது வியாழன் என்ற ஜுபிடர் கிரகம் ஆகும். இது பூமியை விட ஆயிரம் மடங்கு அதிக கொள்ளளவு கொண்டது.