மதுவிருந்தில் கலந்து கொண்ட பெண் டி.எஸ்.பி மர்ம மரணம்: கொலையா? தற்கொலையா?
Send us your feedback to audioarticles@vaarta.com
மது விருந்தில் கலந்து கொண்ட பெண் டிஎஸ்பி ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்திருப்பது பெங்களூர் நகரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பெங்களூரை சேர்ந்த பெண் டிஎஸ்பி லட்சுமி. இவர் ஹைதராபாத்தில் பணிசெய்யும் நவீன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை என்பதும், ஹைதராபாத்திலும் நவீனும், பெங்களூரில் லட்சுமியும் அவரவர் பணியில் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் லட்சுமி தனது வீட்டின் அருகில் இருந்த நண்பர்களுடன் சேர்ந்து மது விருந்தில் கலந்து கொண்டதாக தெரிகிறது. மது விருந்தில் இடையே திடீரென மாடிக்கு சென்று கதவை அடைத்துக் கொண்டார் லட்சுமி. இதனால் சந்தேகமடைந்த நண்பர்கள் கதவை நீண்ட நேரம் தட்டியும் திறக்காததால், கதவை உடைத்து பார்த்தபோது ஜன்னல் கம்பியில் லட்சுமி தனது துப்பட்டாவால் தூக்கிலிடப்பட்ட நிலையில் மர்மமாக இறந்து கிடந்தார்
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது லட்சுமியின் கால் தரையை தொட்டபடி இருந்ததால் இது தற்கொலையா? அல்லது கொலையா? என்ற விசாரணையை தொடங்கியுள்ளனர் என்பதும், இந்த மரணத்தை மர்ம மரணம் என்று வழக்கு பதிவு செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
லட்சுமியின் தந்தை இதுகுறித்து கூறியபோது ’எனது மகள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கோழை இல்லை என்றும் நல்ல பதவியில், தேவையான வசதியுடன், நல்ல உறவினர்களுடன் இருக்கிறார் என்றும் அவருக்கு எந்தவித மன அழுத்தமும் இல்லை என்றும் எனவே லட்சுமி கொலை செய்யப்பட்டிருக்க தான் அதிக வாய்ப்பு உள்ளது என்றும் குறிப்பிட்டார். மேலும் அவர் இருவர் மீது தனக்கு சந்தேகம் என்றும் குறிப்பிட்டுள்ளார். போலீசார் அந்த இருவரை விசாரணை செய்ய உள்ளனர்
மது விருந்தில் கலந்து கொண்ட பெண் டிஎஸ்பி மர்மமான முறையில் மரணம் அடைந்திருப்பது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com