சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர்… பெண் மருத்துவர் மூழ்கி உயிரிழந்த பரிதாபம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று பெய்த கனமழையால் புதுக்கோட்டை அருகேயுள்ள சுரங்கப்பாதை ஒன்றில் மழைநீர் தேங்கியுள்ளது. அந்த மழை நீரில் சிக்கி அரசு பெண் மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
புதுக்கோட்டை வெள்ளனூர் அருகேயுள்ள சுரங்கப்பாதை ஒன்றில் நேற்று 20 அடிக்கும் மேல் மழைநீர் தேங்கி இருக்கிறது. இதுதெரியாமல் அவ்வழியாக சொந்த ஊரான தொடையூருக்குச் செல்ல அரசு பெண் மருத்துவர் சத்யா என்பவரும் அவருடைய மாமியாரும் காரில் வந்துள்ளனர். ஒருகட்டத்தில் கார் அந்த மழைநீரில் சிக்கியுள்ளது. காரில் இருந்த சைலன்சருக்குள் மழைநீர் புகுந்து கொண்டதால் காரும் இயங்காமல் போய் இருக்கிறது.
இந்நிலையில் சத்யாவின் மாமியார் காரின் கதவுகளை திறந்துகொண்டு கரை சேர்ந்துள்ளார். ஆனால் சத்யா சீட் பெல்ட் அணிந்து இருந்ததோடு காரின் கதவை திறக்க முடியாமல் கடைசி வரை முயற்சிசெய்து மூச்சுத் திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ஒசூர் அரசு மருத்துவமனையில் வேலைப்பார்த்து வந்த சத்யா உயிரிழந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
இதனால் புதுக்கோட்டை ஒட்டியுள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள தரைவழிப் பாலங்களை மேம்பாலங்களாக மாற்றித் தரும்படி தற்போது பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தரைவழி சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி அதில் அரசு பெண் மருத்துவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் புதுக்கோட்டை பகுதியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout