சார்ஜ் போட்ட ஐபோன்… இளம்பெண்ணின் உயிரைப் பறித்த பரிதாபம்… உஷாரா இருங்க மக்களே!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
ரஷ்யாவில் தன்னுடைய ஐபோனை சார்ஜ் போட்ட இளம்பெண் ஒருவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். குளியலறைக்கு ஐபோனை எடுத்துச் சென்ற அந்த இளம்பெண் குளியல் தொட்டிக்கு அருகில் இருக்கும் பிளக் பாயிண்டில் சார்ஜிங் போட்டு விட்டு குளித்து இருக்கிறார். ஒரு கட்டத்தில் அந்த சார்ஜிங் ஒயர் ஐபோனுடன் பிடுங்கிக் கொண்டு குளியல் தொட்டியில் விழுந்து இருக்கிறது. இதை கவனிக்காத அந்த இளம்பெண் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.
ரஷ்யாவின் அர்கஹஸ்கில்ஸ் எனும் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த இளம்பெண் ஒலிஷ்யா சிமினேவா. இவர் தனியார் துணிக்கடையில் வேலை செய்து வந்ததாகவும் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சிமினேவா ஐபோன் 8 மாடலை பயன்படுத்தி வந்திருக்கிறார். கடந்த 9 ஆம் தேதி மாலை குளிக்கச் சென்றபோது ஐபோனை குளியல் அறைக்கும் எடுத்துச் சென்றிருக்கிறார்.
குளியல் அறைக்குள் எடுத்துச் சென்ற ஐபோனை சிறிது நேரம் பயன்படுத்தி விட்டு குளியல் தொட்டிக்கு அருகில் உள்ள பிளக் பாயிண்டில் சார்ஜிங்குக்காக போட்டு இருக்கிறார். பின்பு ஒரு கட்டத்தில் அந்த சார்ஜிங் வயர் முழுவதும் பிடுங்கிக் கொண்டு குளியல் தொட்டிக்குள்ளேயே விழுந்து இருக்கிறது. இதைக் கவனிக்காத சிமினேவா மின்சாரம் தாக்கி குளியல் தொட்டிக்குள்ளேயே பரிதாபமாக உயிரிழந்து இருக்கிறார்.
சிமினேவாவை தேடிக்கொண்டு அவரது வீட்டிற்கு வந்த டரியா எனும் பெண் சிமினேவா குளியல் தொட்டியில் மயங்கி கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து இருக்கிறார். எழுப்புவதற்காக அவரை தொட்டு எழுப்ப முயன்றபோது டரியாவையும் மின்சாரம் தாக்கி இருக்கிறது. உடனே சுதாரித்துக் கொண்ட இவர் பிளக்பாயிண்டை நிறுத்திவிட்டு போலீஸாருக்கு தகவல் கொடுத்து இருக்கிறார். உடனே விரைந்த போலீஸார் சிமினேவா உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உள்ளனர்.
பொதுவாக செல்போன் போன்று எந்தப் பொருளையும் குளியல் மற்றும் கழிப்பிடங்களுக்கு எடுத்துச் செல்லக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். காரணம் அதில் பாக்டீரியா போன்ற கிருமிகள் ஒட்டிக் கொள்வதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கும்போது தண்ணீர் அதிகம் புழங்கும் பகுதியில் செல்போனுக்கு சார்ஜ் போடுவது எவ்வளவு ஆபத்தான விஷயம் என்பது உங்களுக்கே புரிந்து இருக்கும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments