மனைவி குழந்தையை நடுரோட்டில் தவிக்க விட்டுவிட்டு காதலியுடன் எஸ்கேப் ஆன கணவன்!

  • IndiaGlitz, [Thursday,July 23 2020]

ஆந்திர மாநிலத்தில் மனைவி மற்றும் குழந்தையை நடுரோட்டில் தவிக்க விட்டுவிட்டு காதலியுடன் எஸ்கேப் ஆன கணவர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பதியை சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும் எட்டு வயது மகளும் உள்ளார். இந்த நிலையில் வெங்கடாஜலபதி வேறு ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. இதனையடுத்து தனது கணவரை மீட்டுத்தர வேண்டும் என்று திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் சரஸ்வதி புகார் செய்தார்.

இது குறித்து விசாரணைக்கு இரு தரப்பினர்களும் காவல் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டனர். விசாரணையின்போது தான் காதலியுடன் செல்ல விரும்புவதாக வெங்கடாஜலபதி காவல் நிலையத்தில் உறுதியாக கூறியதால் சரஸ்வதி அதிர்ச்சி அடைந்தார். இதனால் இரு பெண்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் மகளிர் போலீசாரிடம் சென்று இந்த பிரச்சினையை தீர்த்துக் கொள்ளுங்கள் என காவல்துறையினர் அறிவுறுத்தினர். இதனால் அனைவரும் காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்தனர். இந்த நிலையில் தனது காதலியுடன் இருசக்கர வாகனத்தில் வெங்கடாஜலபதி செல்ல முயன்றபோது அவரை தடுத்து நிறுத்தி தன்னுடன் வருமாறு சரஸ்வதி மன்றாடியுள்ளார். ஆனால் அதை காதில் வாங்கி கொள்ளாமல் வெங்கடாஜலபதி காதலியுடன் செல்வதிலேயே குறியாக இருந்தார்.

இந்த நிலத்தில் சரஸ்வதியின் உறவினர் காவல் நிலையம் முன் பிரச்சனை வேண்டாம் என்று சரஸ்வதியிடம் அறிவுறுத்தினர். இந்த கேப்பில் திடீரென காதலியுடன் வெங்கடாசலபதி தனது பைக்கில் கிளப்பினார். கணவரின் பைக் பின்னால் சென்று சரஸ்வதி ஒருகட்டத்தில் தனது செல்போனை அவர் மீது தூக்கி எறிந்தார். தன்னையும் தனது குழந்தையையும் தவிக்க விட்டுவிட்டு தனது கணவர் சென்று விட்ட அதிர்ச்சியில் சாலையிலேயே உட்கார்ந்து சரஸ்வதி கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

சரஸ்வதியின் 8 வயது மகள் தன்னுடைய தாயாரிடம் தந்தையின் பெயரை செல்போனிலிருந்து உடனே டெலிட் செய்யுங்கள் என்று கூறியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மனைவி மற்றும் குழந்தையை தவிக்க விட்ட கணவன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினருக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.

More News

அதிபரையே வசைமாறிப் பொழியும் ஜோ பிடன்: அமெரிக்க அரசியல் நடக்கும் பரபரப்பு நிகழ்வுகள்!!!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவலை விட தீவிரமாக அரசியல் பிரச்சாரம் நடத்தப்பட்டு வருகிறது.

75 ஆண்டு ஐ.நா வரலாற்றில் இதுவே முதல்முறை: பொதுக்குழுக் கூட்டம் பற்றிய பரபரப்பு அப்டேட்!!!

ஐ.நா. சபையின் பொதுக்குழுக் கூட்டம் வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்க விருக்கிறது.

லாக்டவுனுக்கு மத்தியில் சென்னை மாநகராட்சியின் கட்டமைப்புகளை மேம்படுத்தும் தமிழக அரசு!!!

சென்னை போன்ற பெருநகரங்களில் சாதாரணமாக நகரக் கட்டமைப்புகளை மேம்படுத்துவது இயலாத காரியம்.

பெண்ணாக வாழ தகுதியில்லாதவர்: 24 ஆண்டுகள் தண்டனை கொடுத்து அதிரடி தீர்ப்பளித்த நீதிபதி!

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பணக்காரர்களுக்கு சிறுமிகள் உள்பட இளம் பெண்களை விபச்சாரத்திற்கு அனுப்பி வந்த விபச்சார பெண்  புரோக்கர் ஒருவருக்கு 24 வருட சிறை தண்டனை

சூர்யாதேவியை முதல்ல காப்பாத்தணும்: கஸ்தூரி ஆவேசம்

வனிதா திருமணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்த சூர்யாதேவி, கஸ்தூரி உள்பட 4 பேர் மீது வடபழனி காவல் நிலையத்தில் நடிகை வனிதா புகார் செய்திருந்தார் என்பது தெரிந்ததே