வெறும் வாயால் கின்னஸ் சாதனை… நெட்டிசன்களையே அலற வைத்த இளம்பெண்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நம்மூரில் “வெறும் வாயை மெல்லாதே“ என்று பொதுவாக ஒரு சொலவடை சொல்லப்படுவது உண்டு. ஆனால் அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னுடைய வெறும் வாயை வைத்தே கின்னஸ் சாதனை படைத்து இருக்கிறார். கூடவே இதுநாள் வரை அசிங்கமாக நினைத்த தனது அழகை சாதனையாகவும் மாற்றிக் காட்டியிருக்கிறார்.
அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தைச் சேர்ந்தவர் சமந்தா ரெம்ஸ்டெல்(31). இவர் யூடியூப் பிரபலமாக அறியப்படுகிறார். தனது யூடியூப் பக்கத்திற்கு ஏராளாமான ஃபாலோயர்களை கொண்ட இந்த பெண்மணி தான் சாப்பிடும் வீடியோவை பதிவிட்டே பிரபலமாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
அதாவது சமந்தா எவ்வளவு பெரிய உணவாக இருந்தாலும் அதை ஒரே வாயாக முழுங்கி விடுவாராம். இப்படி பெரிய பெரிய உணவுத் துண்டுகளை தனது வாய்க்குள் அடைத்து முழுங்குவதையே தனது தனிச்சிறப்பாக மாற்றியுள்ளார். இதுகுறித்து, எப்படி உங்களால் மட்டும் இவ்வளவு பெரிய உணவுத் துண்டுகளைச் சாப்பிட முடிகிறது? எனக் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.
இதற்கு பதிலளித்த சமந்தா, என்னுடைய வாய் சாதாரண ஒரு மனிதனுடைய வாயைவிட அளவில் பெரியது. இதனால் எவ்வளவு பெரிய உணவுத்துண்டாக இருந்தாலும் அதை ஒரே பைட்டில் கடித்து தின்றுவிடுவேன் என்று கூறியிருக்கிறார்.
மேலும் தன்னுடைய திறமை குறித்த கின்னஸ் சாதனை குழுவிற்கு தெரியப்படுத்தி இருக்கிறார். இதனால் அவருடைய வாயை அளந்து பார்த்த கின்னஸ் சாதனை குழு சமந்தாவின் வாயானது கிட்டத்த 6.56 செ.மீ அளவிற்கு இருப்பதை கண்டுபிடித்து உள்ளது. கூடவே ஒட்டுமொத்த வாயும் 10 செ.மீ அளவிற்கு இருப்பதால் அவருக்கு பெரிய உடல் உறுப்பு இருக்கும் பிரிவில் அவரது பெயரை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற செய்திருக்கிறது.
இதற்கு முன்பு சிறுவர்கள் தன்னடைய வாயை பார்த்து கிண்டல் செய்வதாக வருதப்பட்ட சமந்தா, தற்போது அதுவே ரசிக்கும் ஒரு நிலைக்கு மாற்றப்பட்டு இருப்பது குறித்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு வருகிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com