போலீசார் தாக்கியதால் அவர்கள் முன்னிலையிலேயே தீக்குளித்து பெண் தற்கொலை…பதற வைக்கும் சம்பவம்!!!

  • IndiaGlitz, [Friday,November 27 2020]

 

நெல்லை மாவட்டத்தில் தன்னைத் தாக்கிய போலீசார் முன்னிலையிலேயே 45 வயதான பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நெல்லை மாவட்டத்தின் சுத்தமல்லி எனும் பகுதியில் சகுந்தலா(45) எனும் பெண்மணி தனது 2 மகன்களுடன் வசித்து வருகிறார். வாக்குவாதத்தில் ஈடுபட்ட இவரை போலீசார் தாக்கியதால் விரக்தியில் தற்கொலை செய்து கெண்டார் என்றும் கூறப்படுகிறது.

திருட்டு வழக்கு ஒன்றில் சகுந்தலாவின் 2 ஆவது மகன் பிரதீப் (20) என்பவருக்குத் தொடர்பு இருப்பதாகப் போலீஸ் தரப்பு தெரிவித்து இருக்கிறது. இதை பிரதீப்பும் ஒப்புக் கொண்டுள்ளார். இந்நிலையில் திருட்டுப் பொருளை மீட்பதற்காக நேற்று முன்தினம் அதிகாலை 3 மணிக்கு போலீசார் சகுந்தலாவின் வீட்டிற்கு வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது திருட்டுப் பொளை எடுத்துக் கொண்ட போலீசார் பிரதீப்பை விசாரணைக்கு அழைத்துக் கொண்டதோடு சகுந்தலாவின் மூத்த மகன் பிரசாந்த் (22) ஐயும் கூடவே அழைத்துச் செல்ல முற்பட்டு இருக்கின்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த சகுந்தலா திருட்டு வழக்கில் சம்பந்தமுடைய பிரதீப்பை அழைத்துச் செல்கிறீர்கள். மூத்தவன் எதற்கு எனக் கேள்வி கேட்டு ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார். இச்சம்பவத்தின்போது அக்கம் பக்கத்து வீட்டாரும் சகுந்தலாவின் வீட்டிற்கு முன் குவிந்து இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது சகுந்தலாவின் கேள்விகளால் எரிச்சல் அடைந்த போலீசார் அவரை லத்தியதால் தாக்கிதாகக் கூறப்படுகிறது. இதைச் சற்றும் எதிர்பாராத சகுந்தலா அதே இடத்திலேயே மண்ணெய் ஊற்றித் தற்கொலைக்கு முயன்று இருக்கிறார்.

இதைப் பார்த்து அதிர்ந்து போன போலீசார் சகுந்தலாவை காப்பாற்ற முயற்சித்து இருக்கின்றனர். மேலும் தீயிட்டு கொளுத்திக் கொண்ட அவரை போலீஸ் வாகனத்திலேயே மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்று இருக்கின்றனர். ஆனால் வழியிலேயே சகுந்தலாவின் உயிர் பிரிந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் போலீசார் தாக்கியதால் விரக்தியில் தீயிட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

More News

பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிட்டு நூற்றுக்கணக்கான ஒட்டகங்கள் உயிரிழந்த பரிதாபம்!!!

துபாய் ஒட்டியுள்ள புறநகர் பாலைவனப் பகுதிகளில் ஆதரவற்று பல ஆயிரக்கணக்கான ஒட்டகங்கள் உயிர் வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலங்கள்… முதல் இடத்தைப் பிடித்து தமிழகம் சாதனை!!!

அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலங்களுக்கான விருதுப் பட்டியலில் தமிழகம் முதலிடம் பெற்று இருக்கிறது.

ஒன்டே கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கிறார் தமிழக வீரர் டி.நடராஜன்!!!

முன்னதாக ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 போட்டிகளில் விளையாட தமிழகத்தைச் சேர்ந்த தங்கராசு நடராஜன் தேர்வு செய்யப்பட்டு இருந்தார்.

நிஷா இன்னும் கேம் பண்ணவே இல்லை: நிஷா கணவர்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெள்ளேந்தியாக இருக்கும் ஒரு போட்டியாளர் என்றால் அது நிஷா மட்டுமே என்பதுதான் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது. எதை சொன்னாலும் நம்பிவிடுவது

பாலாற்றில் வெள்ளப் பெருக்கு… 40 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!!

நிவர் புயல் கரையைக் கடந்தப் பின்பும் திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் ஒட்டிய பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது.