ஹாஸ்பிடலில் அழுவதற்கும் கட்டணமா? என்னவொரு புது தந்திரம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
மருத்துவமனை என்றாலே நம்மில் பலருக்கு பயம்தான். அதுவும் அவர்கள் நீட்டும் கட்டண பில்லை நினைத்தால் பீதியே ஏற்பட்டு விடும். இந்நிலையில் இளம்பெண் அறுவை சிகிச்சையின்போது பயத்தில் அழுதார் என்ற காரணத்திற்காக Brief Emotional என்ற பெயரில் தனியாக கட்டணம் வசூலித்து அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது ஒரு மருத்துவமனை நிர்வாகம்.
அமெரிக்காவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மச்சத்தை நீக்குவதற்காக இளம்பெண் ஒருவர் சென்றுள்ளார். அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பு அந்தப் பெண் வலிக்குமோ என்ற பயத்தில் சற்று மிகையாகவே அழுதுவிட்டார். சரி இதற்குத்தானே வந்திருக்கிறோம் என்று ஒருவழியாக மனதைத் தேற்றிக்கொண்ட அந்தப் பெண் அறுவை சிகிச்சை செய்து கொண்டு மருத்துவமனையை விட்டு கிளம்பியிருக்கிறார். அப்போது உதவியாளர்கள் பில்லை எடுத்து நீட்டி இருக்கின்றனர்.
அந்த பில்லில் Brief Emotional என்ற பெயரில் புதிதாக ஒரு கட்டணம் போடப்பட்டு இருந்தது. இதைப்பார்த்து அதிர்ந்துப்போன இளம்பெண் ஒருகட்டத்தில் பில்லை செட்டில் செய்துவிட்டு வீட்டிற்கு வந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது. இந்தச் சம்பவத்தில் அந்த இளம்பெண் தன்னுடைய மச்சத்தை நீக்குவதற்கான அறுவை சிகிச்சைக்கு 223 டாலர் கட்டணத்தையும் அழுததற்கு 11 டாலர் கட்டணத்தையும் செலுத்தினார் என்பதுதான் இன்னும் விசித்திரம். 11 டாலர் என்பது ஏறக்குறைய இந்திய மதிப்பில் 900 ஐ தொடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Mole removal: $223
— Midge (@mxmclain) September 28, 2021
Crying: extra pic.twitter.com/4FpC3w0cXu
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments