புத்திசாலித்தனத்தால் திருடனை விரட்டி அடித்த இளம் பெண்..! வீடியோ.
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்காவில் பெண் ஒருவர் தனது புத்தி சாதுரியத்தால் திருடனை விரட்டியடித்த சம்பவத்தின் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்கா தென் கலிஃபோர்னியா மாகாணத்தில் இருக்கும் ஒரு குடியிருப்புப் பகுதியில் வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களில் அடிக்கடி திருட்டு போய்க்கொண்டிருந்து வந்திருக்கிறது. குடியிருப்புவாசிகள் அதிக வெளிச்சம் தரக்கூடிய விளக்குகள், சிசிடிவி காமிராக்கள் போன்றவை பொருத்தி பார்த்தும் திருட்டை குறைக்க முடியவில்லை.
இந்நிலையில் அதே பகுதியில் வசித்து வரும் கேட்டி கேமரேனா என்ற பெண்மணி இந்த திருட்டு சம்பவங்களிலிருந்து தன்னுடைய வாகனத்தை காத்துக்கொள்ள motion activated sprinkler என்ற ஒரு கருவியை தனது காரில் பொருத்தி வைத்திருக்கிறார். இது எப்படி செயல்படுமென்றால் வாகனம் லாக் செய்யப்பட்ட பிறகு சவுண்ட் சென்சார் இருந்தால் தொட்டவுடன் அலாரம் அடிக்கும் அல்லவா.. அதேபோல் இது வாகனத்தில் பெரிய அளவு அசைவுகள் இருந்தால் அசைவு இருக்கும் இடத்தை நோக்கி தண்ணீர் பீய்ச்சி அடிக்கும்.
இந்த motion activated sprinkler வாகனத்தில் பொறுத்தப்பட்டிருப்பதை அறியாத திருடன் வழக்கம்போல் திருடுவதற்காக கேட்டி கேமரேனாவின் காரின் அருகே வந்துள்ளான். வாகனத்தை திறக்க முற்பட்டவுடன் சென்சார் ஆக்ட்டிவேட்டாகி திருடன் மீது தண்ணீர் பீய்ச்சியடித்து அவனை துரத்திவிட்டது.தனது சிசிடிவியில் பதிவான இந்த வீடியோவை கேட்டி தனது முகநூலை பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Sai Surya
Contact at support@indiaglitz.com