"பாகிஸ்தான் ஜிந்தாபாத்" - CAA க்கு எதிரான பேரணியில் முழக்கம் எழுப்பிய இளம் பெண் கைது
Send us your feedback to audioarticles@vaarta.com
நாடு முழுவதும் இந்தியக் குடியுரிமைச் சட்டம் (CAA), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) க்கு எதிராகக் கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பெங்களுரில் CAA க்கு எதிராக ‘சேவ் கான்டிட்யூஷன்’ என்ற அமைப்பின் சார்பாகப் பிரம்மாண்ட பேரணி ஒன்று நடைபெற்றது . இதில் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவரும் ஹைத்ராபாத் மக்களவை உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
இந்த பேரணி துவக்கத்திற்கான மேடையில் அமுல்யா லியோனா எனும் இளம் பெண் உரையாற்றினார். உரையாற்றிக் கெண்டிருக்கும் போதே திடீரென “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்று முழக்கமிடத் தொடங்கினார். இவரது செயலைக் கண்ட ஓவைசி மற்றும் அங்குள்ள மற்றவர்கள் அவரைத் தடுக்க முயற்சி செய்தனர். ஆனால் அமுல்யா தனது முழக்கத்தை விடவேயில்லை. எனவே அவரை காவல் துறையினர் மேடையிலே வைத்து கைது செய்திருக்கின்றனர்.
அமுல்யாவின் கைதுக்குப் பின் உரையாடிய ஓவைசி முழக்கம் எழுப்பிய பெண்ணிற்கும் எங்களது கட்சிக்கும், தற்போதைய போராட்டத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. “நாங்கள் இந்தியாவை ஆதரிப்பவர்கள். எதிரி நாடான பாகிஸ்தானை ஆதரிக்கவில்லை. நமது நோக்கம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பது” என மேடையிலேயே விளக்கம் அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
முழக்கம் எழுப்பிய அமுல்யா மீது பெங்களூர் காவல் துறை தேசத் துரோக வழக்கைப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தது. விசாரித்த நீதிபதி அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். எனவே அமுல்யா தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப் பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் ஒரு இளம்பெண் பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிட்டது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments