ஜீன்ஸ் அணிந்ததற்காக இளம் பெண்ணுக்கு நடந்த அவலம்!

  • IndiaGlitz, [Tuesday,November 02 2021]

அசாம் மாநிலத்தில் பர்தா அணியாமல் ஜீன்ஸ் அணிந்துவந்த இளம் பெண்ணை கடைக்காரர் ஒருவர் தாக்கியதோடு தரைக்குறைவாகப் பேசிய சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அசாம் மாநிலத்தின் பிஸ்வநாத் சைராலி எனும் பகுதியில் செல்போன் உதிரிபாக கடை வைத்திருப்பவர் நூருல் அமீன். இவரது கடைக்கு இளம்பெண் ஒருவர் செல்போன் உதிரிபாகம் வாங்க வந்துள்ளார். முஸ்லீம் பெண்ணான இவர் பர்தா அணியாமல் ஜீன்ஸ் உடையில் வந்ததால் கடையின் உரிமையாளர் நூருக் அமீன் அந்தப் பெண்ணை திட்டியிருக்கிறார். மேலும் அந்தக் கடைக்குவந்த இருவர், இளம் பெண்ணை தரக்குறைவாக பேசியதோடு அடித்து தாக்கியிருக்கின்றனர்.

இதையடுத்து தனது பெண்ணிற்கு நடந்த கொடுமையைத் தட்டிக்கேட்ட அந்தப் பெண்ணின் தந்தையையும் அடித்துள்ளனர். இதுகுறித்துப் பேசிய அப்பெண்ணின் தந்தை எனது மகள் அசாமில் பிறந்து வளர்ந்தவர். பிஎஸ்சி படிக்கிறார். நாங்கள் அசாம் கலாச்சாரத்தைத்தான் பின்பற்றுகிறோம்.

ஆனால் சமீபகாலமாக சிலர் தாலிபான்களின் கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டும் என்று பெண்களை அச்சுறுத்தி வருகின்றனர் எனக் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து இளம்பெண்ணை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.