நடிகர் விஷாலுடன் பள்ளி சிறுமியை இணைத்து ஆபாச பதிவு செய்த பெண் கைது

  • IndiaGlitz, [Thursday,June 13 2019]

நடிகர் விஷாலுடன் பள்ளிச்சிறுமி ஒருவரை ஆபாசமாக இணைத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த விஷ்வதர்ஷிணி என்ற பெண்ணுடன் பக்கத்து வீட்டுப்பெண் தகராறு செய்ததால், பக்கத்து வீட்டை பெண்ணை பழிவாங்க, அவருடைய மகளான பள்ளிச்சிறுமியின் புகைப்படத்தை நடிகர் விஷாலின் புகைப்படத்துடன் இணைத்து சமூக வலைத்தளங்களில் ஆபாச கருத்தையும் பதிவு செய்துள்ளார்.

இந்த பதிவை பார்த்த பள்ளிச்சிறுமியின் தாயார் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து காவல்துறையில் புகார் செய்துள்ளார். இந்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்தபோது பள்ளிச்சிறுமியின் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் விஷ்வதர்ஷிணி வேலைதான் இது என்பது தெரிய வந்தது. இதனையடுத்து விஷ்வதர்ஷிணி மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த விஷ்வதர்ஷிணி உடனே தலைமறைவானார். ஆனால் திருச்செங்கோட்டில் அவர் இருப்பதாக போலீசாருக்கு தகவல் வர, உடனே போலீசார் திருச்செங்கோடு சென்று விஷ்வதர்ஷிணியை கைது செய்து சிறையில் அடைத்தனர். பக்கத்து வீட்டு பெண்ணுடன் நடந்த சாதாரண தகறாருக்காக அவருடைய மகளை ஒரு நடிகருடன் இணைத்து அவதூறாக சித்தரித்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.