ஷேர்வார்னே மரணம்: பூங்கொத்துடன் ஆம்புலன்ஸில் நுழைந்த பெண்மணி யார்?

ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேர் வார்னேவு சமீபத்தில் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்த நிலையில் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்முன், ஆம்புலன்சில் பூங்கொத்துடன் நுழைந்த பெண்மணி யார் என்ற கேள்வி தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே தாய்லாந்து சென்று இருந்தபோது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவரது மறைவு உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஷேர்வார்னே உடல் ஆம்புலன்சில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்படும் நேரத்தில் திடீரென ஒரு பெண் ஆம்புலன்ஸ் உள்ளே சென்றதாக தெரிகிறது. அவர் ஆம்புலன்ஸில் உள்ள ஷான் வார்னே உடலுக்கு பூங்கொத்துக்களை வைத்து தனது கடைசி மரியாதையைத் செலுத்தியதாக கூறப்படுகிறது.

இது குறித்து தாய்லாந்து போலீசார் விசாரணை செய்ததில் அந்த பெண்மணி ஜெர்மன்யை சேர்ந்தவர் என்றும், ஷேர்வார்னேவின் நெருங்கிய நண்பர் மற்றும் தீவிர ரசிகை என்றும் தாய்லாந்து அரசு அதிகாரிகளுக்கும் அவர் பரிட்சயமானவர் என்றும், அதனால்தான் அவர் பூங்கொத்துடன் ஆம்புலன்ஸ் உள்ளே இறுதி மரியாதை செய்ய அனுமதிக்கப்பட்டதாகவும் தாய்லாந்து போலீஸார் விளக்கமளித்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

More News

சிவகார்த்திகேயன் மாதிரி என்னால் நடிக்க முடியாது: அருள்நிதி

சிவகார்த்திகேயன் மாதிரி தன்னால் நடிக்க முடியாது என நடிகர் அருள்நிதி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

'எதற்கும் துணிந்தவன்' படத்தை திரையிட வேண்டாம்: பிரபல அரசியல்வாதி அறிக்கை

சூர்யா நடித்த 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படம் வரும் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தை கடலூர் மாவட்டத்தில் திரையிட வேண்டாம் என பாமக மாநில

'அரபிக்குத்து' பாடல் குறித்து விஜய் என்ன சொன்னார்? சிவகார்த்திகேயன் தகவல்!

விஜய் நடித்த 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற 'அரபிக்குத்து'  என்ற பாடல்

நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் இணைந்துவிட்டோம்: புகைப்படத்தை மகிழ்ச்சியுடன் பகிர்ந்த்த தனுஷ் 

நீண்ட இடைவேளைக்கு பின்னர் மீண்டும் இணைந்து விட்டோம் என தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளதை அடுத்து அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 

ஏ.ஆர்.ரஹ்மானின் கோரிக்கைக்கு இசைஞானி அளித்த பதில்!

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் கோரிக்கைக்கு இசைஞானி இளையராஜா பதிலளித்துள்ளதை அடுத்து அவரது பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது