சேலை அணிந்ததால் நட்சத்திர ஹோட்டலில் அனுமதியில்லை? சர்ச்சை சம்பவம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
டெல்லியில் உள்ள நட்சத்திர உணவகம் ஒன்றில் பத்திரிக்கைத் துறையைச் சார்ந்த பெண் ஒருவர் சேலை அணிந்து வந்ததால் தன்னை உணவகத்திற்குள் அனுமதிக்கவில்லை என்று சோஷியல் மீடியாவில் கருத்துப் பதிவிட்டு உள்ளார். இந்தப் பதிவை அடுத்து நெட்டிசன்கள் பலரும் கடும் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
தலைநகர் டெல்லியின் கிரார்ந்தி மார்க்கில் உள்ள அகிலா எனும் பிரபல நட்சத்திர ஹோட்டலுக்கு அனிதா சவுத்ரா எனும் பெண் பத்திரிக்கையாளர் சென்றுள்ளார். அவரிடம் ஹோட்டல் உழியர்கள் ஸ்மார்ட் கேஷுவல் அணியவில்லை. சேலை ஸ்மார்ட் கேஷுவல் உடைக்குக் கீழ் வராது எனப் பதில் அளிக்கும் வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இதையடுத்து அந்தப் பெண் பத்திரிக்கையாளர் இந்தியாவின் புத்திசாலித்தனமான உடையில் சேலை இல்லையா? சொல்லுங்கள் இனிமேல் சேலை அணிவதையே நிறுத்திவிடுகிறேன் என்று கூறுவது போன்றிருக்கும் வீடியோவில் ஹோட்டல் பெண் ஊழியர் மட்டுமே தெரிகிறார்.
இதையடுத்து பத்திரிக்கையாளர் அனிதா சவுத்ரா நான் சேலை அணிந்ததாலேயே ஹோட்டலுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை எனறு தனது டிவிட்டரில் பதிவிட்டு உள்ளார். இந்தப் பதிவிற்கு எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை அகிலா உணவகம் மறுத்திருக்கிறது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஹோட்டல் நிர்வாகம் ஒரு விருந்தினர் எங்களது ஹோட்டலுக்கு வந்தார். அவர் முன்பதிவு செய்யாததால் வரவேற்பு அறையில் காத்திருக்கச் சொன்னோம். ஆனால் அவர் ஹோட்டல் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒரு ஊழியரை அறைந்துவிட்டார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் எங்களிடம் உள்ளன. மேலும் எங்களுடைய உணவகத்தில் அனைத்துவிதமான ஆடைகளுக்கும் அனுமதி உண்டு எனக் கூறியுள்ளது.
இந்த விவகாரத்தில் ஏற்கனவே ஸ்மார்ட் உடை குறித்து அனிதா சவுத்ராவிடம் பெண் ஊழியர் பேசும் வீடியோ வெளியான நிலையில் தற்போது ஹோட்டல் நிர்வாகம் அதை மறுத்து இருக்கிறது. இதனால் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
Saree is not allowed in Aquila restaurant as Indian Saree is now not an smart outfit.What is the concrete definition of Smart outfit plz tell me @AmitShah @HardeepSPuri @CPDelhi @NCWIndia
— anita choudhary (@anitachoudhary) September 20, 2021
Please define smart outfit so I will stop wearing saree @PMishra_Journo #lovesaree pic.twitter.com/c9nsXNJOAO
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments