இன்னொரு மீடூ குற்றச்சாட்டு: தியாகராஜன் மீது திடுக்கிடும் புகார் அளித்த இளம்பெண்

  • IndiaGlitz, [Saturday,October 20 2018]

நடிகர் பிரசாந்த் தந்தையும் நடிகரும் இயக்குனருமான தியாகராஜன் மீது இளம்பெண் ஒருவர் திடுக்கிடும் மீடூ குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார்.

தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த் நடித்த 'பொன்னர் சங்கர்' படத்தின் போட்டோகிராபராக பணிபுரிந்த பிரித்திகா மேனன் என்பவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தியாகராஜன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியுள்ளார்.

படப்பிடிப்பின்போது தன்னை அருகே வரச்சொன்ன தியாகராஜன், தாய்லாந்து பெண்கள் தனக்கு மசாஜ் செய்ததையும், அவர்களுடன் தான் கழித்த காலங்கள் குறித்து கூறியதாகவும், மேலும் தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு வந்து நடுஇரவில் கதவை தட்டியதாகவும், அந்த நேரத்தில் தான் மிகவும் பயந்ததாகவும் கூறியுள்ளார்.

வைரமுத்து தொடங்கி மீடூ குற்றச்சாட்டுக்கள் அதிகரித்து கொண்டே செல்வதால் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.