ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்திய பெண்ணுக்கு மின்சாரம் பாய்ந்தது எப்படி?
Send us your feedback to audioarticles@vaarta.com
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் வளாகத்தில் உள்ள மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சென்னைக்கு சுற்றுலா வருபவர்களின் முதல் சாய்ஸ் ஜெயலலிதா சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்துவதாகத்தான் உள்ளது.
இந்நிலையில் சென்னை வியாசர்பாடி அருகில் உள்ள கன்னிகாபுரம் என்ற பகுதியை சேர்ந்த குணசுந்தரி என்ற பெண் நேற்று இரவு ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு அந்த வளாகத்தில் இருந்த புல்தரை வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது அவர் தரையில் கிடந்த மின்சார வயரை கவனக்குறைவாக மிதித்ததால் அவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது.
இதனால் தூக்கியடிக்கப்பட்ட அந்த பெண்ணை அங்கிருந்த காவல்துறையினர் உடனடியாக அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
மின்சார வயரை அஞ்சலி செலுத்த வருபவர்கள் செல்லும் வழியில் போதிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யாமல் வைத்ததே இந்த சம்பவத்திற்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இனிமேலும் இதேபோன்று யாரு வேறு யாருக்கும் நிகழாத வகையில் மின்சார் வயர்களை பாதுகாப்புடன் பயன்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments