ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்திய பெண்ணுக்கு மின்சாரம் பாய்ந்தது எப்படி?

  • IndiaGlitz, [Tuesday,December 27 2016]

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் வளாகத்தில் உள்ள மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சென்னைக்கு சுற்றுலா வருபவர்களின் முதல் சாய்ஸ் ஜெயலலிதா சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்துவதாகத்தான் உள்ளது.

இந்நிலையில் சென்னை வியாசர்பாடி அருகில் உள்ள கன்னிகாபுரம் என்ற பகுதியை சேர்ந்த குணசுந்தரி என்ற பெண் நேற்று இரவு ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு அந்த வளாகத்தில் இருந்த புல்தரை வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது அவர் தரையில் கிடந்த மின்சார வயரை கவனக்குறைவாக மிதித்ததால் அவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது.

இதனால் தூக்கியடிக்கப்பட்ட அந்த பெண்ணை அங்கிருந்த காவல்துறையினர் உடனடியாக அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மின்சார வயரை அஞ்சலி செலுத்த வருபவர்கள் செல்லும் வழியில் போதிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யாமல் வைத்ததே இந்த சம்பவத்திற்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இனிமேலும் இதேபோன்று யாரு வேறு யாருக்கும் நிகழாத வகையில் மின்சார் வயர்களை பாதுகாப்புடன் பயன்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

More News

13 வருடங்களுக்கு பின் விஜய்யுடன் இணையும் பிரபல நடிகை

இளையதளபதி விஜய் மற்றும் நடிகை ஜோதிகா இணைந்து 2000ஆம் ஆண்டு வெளிவந்த 'குஷி', 2003ஆம் ஆண்டு வெளியான...

எளிமையின் சிகரம் நம்ம நல்லக்கண்ணு. பிறந்த நாள் பகிர்வு

அரசியல் என்றாலே சாக்கடை என்றும் அரசியல்வாதிகள் என்றாலே அயோக்கியர்கள் என்று இன்றைய இளைஞர்களின் கருத்தாக உள்ளது...

மக்கள் நலக்கூட்டணியில் இருந்து திடீர் விலகல். வைகோ அதிரடி அறிவிப்பு

கடந்த மே மாதம் நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலின்போது வைகோவின் தீவிர முயற்சியால் உருவானது...

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் போட்டியா?

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடந்து வரும் நிலையில்...

சசிகலாவை சந்தித்தாரா அஜித்?

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் தல அஜித், அவருடைய மறைவின்போது...