பாகிஸ்தான் ரசிகையின் கேள்விக்கு பதிலடி கொடுத்த பிரியங்கா சோப்ரா
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் நடித்த 'தமிழன்' உள்பட பல பாலிவுட், ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அதில் பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் பெண் ரசிகை ஒருவர் கேட்ட சர்ச்சைக்குரிய கேள்விக்கு பிரியங்கா சோப்ரா பதிலடி கொடுத்தார். அந்த ரசிகை கேட்ட கேள்வி இதுதான்:
பாகிஸ்தானின் பாலகோட் பயங்கரவாதிகள் முகாமை இந்திய போர் விமானங்கள் தாக்கி அழித்தது குறித்து நீங்கள் இந்திய பாதுகாப்பு படைக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தீர்கள். யுனிசெப், நல்லெண்ண தூதராக இருக்கும் நீங்கள், பாகிஸ்தானுக்கு எதிராக அணு ஆயுத போரை ஆதரிக்கலாமா? உங்களையும் உங்கள் படங்களையும் பாகிஸ்தானில் பார்த்து ரசிக்கிறோம். ஆனால், நீங்கள் அணு ஆயுத போருக்கு ஆதரவாகச் செயல்படுகிறீர்கள்? இது சரிதானா? என்று கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்விக்கு பதிலளித்த பிரியங்கா சோப்ரா, 'பாகிஸ்தானில் எனக்கு அதிக நண்பர்கள் இருக்கிறார்கள். நான் போரை தூண்டுபவர் அல்ல. ஆனால் அதே நேரத்தில் நான் ஒரு இந்தியர் என்பதால் எனக்குள் தேசபக்தி இருக்கிறது. இதற்காக என்னை நேசித்த, நேசித்துக் கொண்டிருப்பவர்களின் மனம் காயப்பட்டிருந்தால் வருந்துகிறேன். நாம் அன்பு செலுத்தவே இங்கு உள்ளோம். இருப்பினும் இப்படியொரு கேள்வியை கேட்ட உங்களுக்கு என் நன்றி' என்று தெரிவித்துள்ளார்.
Priyanka Chopra tweeted during a time when we were this ???? close to sending nukes to one another. Instead of advocating for peace she tweeted in support of the Indian army pic.twitter.com/LhbMkOW59v
— Ayesha Malik (@Spishaa) August 11, 2019
Priyanka Chopra gets an audience question calling her hypocritical — here’s her response. #beautycon pic.twitter.com/pS82qX1SQG
— Lindsay Weinberg (@WeinbergLindsay) August 10, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout