கள்ளக்காதலனை அடைய கர்ப்பிணியை கொலை செய்த இளம்பெண்: அதிர்ச்சி தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
கள்ள காதலனை அடைய வேண்டும் என்பதற்காக அந்த கள்ளக்காதலனின் மனைவியை கர்ப்பிணி என்றும் பாராமல் கொலை செய்த இளம்பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெலகாவி என்ற பகுதியை சேர்ந்த கல்பனாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த கங்கப்பா என்பவருக்கும் காதல் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் திடீரென கங்கப்பா தனது பெற்றோர்கள் பார்த்து வைத்திருந்த ரோகிணி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனால் கல்பனா அதிர்ச்சி அடைந்தாலும் கங்கப்பாவுடன் திருமணத்திற்கு பின்னரும் தொடர்பில் இருந்து வந்ததாக தெரிகிறது.
ஒரு கட்டத்தில் ரோகினி கர்ப்பம் ஆனவுடன் கல்பனாவுடன் கள்ளத்தொடர்பை நிறுத்திக் கொள்ள கஙகப்பா முடிவு செய்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த கல்பனாவின் கோபம் ரோகினியின் மீது திரும்பியதால் அவரை கொலை செய்ய முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
தனது உறவினர்கள் நால்வர் உதவியுடன் கல்பனா, நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த ரோகிணியை கொலை செய்துள்ளார். இந்தக் கொலையை நேரில் பார்த்த ரோகிணியின் தோழி ஒருவரையும் அவர் கொலை செய்துள்ளார்.
இந்த இரட்டை கொலை குறித்து பெலகாவி போலீசார் விசாரணை செய்து வந்தபோது கங்கப்பாவுக்கு கல்பனாவுக்கும் இடையே கள்ள தொடர்பு இருந்ததும் கல்பனா தான் இந்த கொலைகளை செய்தது என்பதும் தெரியவந்தது இதனை அடுத்து கல்பனா மற்றும் அவருக்கு இந்த கொலையில் உதவிய 4 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கள்ளக்காதலனை அடைய வேண்டும் என்பதற்காக கர்ப்பிணி பெண்ணை ஈவு இரக்கமில்லாமல் கொலை செய்த கல்பனாவால் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com