திடீரென மயங்கிய பைலட்… 70 வயது பெண்மணியால் பயணிகள் உயிர்பிழைத்த சம்பவம்!

  • IndiaGlitz, [Tuesday,July 18 2023]

அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று பயணம் செய்த நிலையில் அதன் பைலட் திடீரென்று மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து சக பயணியாக இருந்த மூதாட்டி ஒருவர் அந்த விமானத்தை சாதுர்யமாக இயக்கி அனைவரையும் காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அமெரிக்காவின் நியூயார்க் வெஸ்ட் செஸ்ட் பகுதியில் இருந்து இயக்கப்பட்ட Piper merdian Turbo Pro எனும் சிறிய ரக விமானம் ஆனது மசாசூசெட்ஸ் விமான நிலையத்தை நோக்கி கடந்த சனிக்கிழமை பறந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென விமானத்தை ஓட்டிக்கொண்டிருந்த பைலட் சுருண்டு விழுந்துள்ளார். இதனால் 6 பேருடன் பயணித்த அந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறிய நிலையில் விமானத்தில் பயணம் செய்த 68 வயது பெண்மணி உடனடியாக விமானத்தை இயக்க முன்வந்துள்ளார்.

மேலும் விமானக் கட்டுப்பாட்டு அதிகாரிகளை தொடர்புகொண்டு அவர்களின் ஆலோசனையைக் கேட்டு மசாசூட்செட்ஸ் பகுதியின் மேற்கே இருக்கும் டிஸ்பரியில் உள்ள மார்தா வைன்யார்ட் பகுதியில் விமானத்தை தரை இறக்கியுள்ளார். ஆனால் எவ்வளவு சாதுர்யமாக செயல்பட்டும் விமானத்தின் வலது புற இறக்கையானது தடுப்புச்சுவரில் சிக்கி நொறுங்கியது. இதனால் சக பெண் பயணி ஒருவருக்கு மட்டும் காயங்கள் ஏற்பட்ட நிலையில் மற்ற பயணிகள் உயிர்பிழைத்துக் கொண்டனர்.

மேலும் மயங்கி விழுந்த பைலட் உடனடியாக பாஸ்டன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 6 பேருடன் இயங்கிய விமானத்தின் பைலட்டிற்கு உடல்நிலை மோசமானதை அடுத்து 68 வயது பெண்மணி சாதுர்யமாகச் செயல்பட்டதால் சக பயணிகள் அனைவரும் தற்போது நல்ல உடல்நிலையுடன் வீடு திரும்பியுள்ளனர். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து அந்த பெண் பயணிக்கு பாராட்டுகள் குவித்து வருகின்றன.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விமானம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. ஆனால் சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் சென்று பார்ப்பதற்குள் அந்த விபத்தினால் சுற்றியிருந்த ஒரு ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் முற்றிலும் எரிந்துபோன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அமெரிக்காவில் ஜெட் ரக விமானங்கள் மற்றும் சிறிய ரக விமானங்கள் விபத்துகளில் சிக்கும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
 

More News

யூடியூபருக்கு கோடிக்கணக்கில் சம்பளமா? ஐடி ரெய்டில் வசமாக சிக்கிய சம்பவம்!

ஏற்கனவே கேரளாவில் பிரபல யூடியூபர்கள் பல பேர் கோடிக்கணக்கில் சம்பாதித்து வந்த நிலையில் முறையாக வருமான வரிச் செலுத்தவில்லை என்று அடுக்கடுக்காக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்

27 இளைஞர்களை திருமணம் செய்த இளம்பெண்… இரவோடு இரவாக மாயமான சம்பவம்!

காஷ்மீர் பகுதியில் இளம்பெண் ஒருவர் திருமணம் ஆன சில நாட்களிலேயே காணாமல் போயிருக்கிறார்.

டிடிஎஃப் வாசனின் 'மஞ்சள் வீரன்' நாயகியும் யூடியூப் பிரபலமா?

யூடியூப் மூலம் பிரபலமான டிடிஎஃப் வாசன் 'மஞ்சள் வீரன்' என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் நாயகியாக நடிக்க இருப்பவரும் யூடியூப் மூலம் பிரபலமானவர் தான் என்று கூறப்படுகிறது.

ஒரு வருடத்திற்கு பின் மீண்டும் இன்ஸ்டாவுக்கு வந்த அமலாபால்.. ரீஎண்ட்ரி பிரமாதம்..!

நடிகை அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வருடத்திற்கு மேல் எந்தவித கிளாமர் பதிவுகளும் செய்யாத நிலையில் மீண்டும் ரீஎண்ட்ரி ஆகி, பிரமாதமான கிளாமரில் கலக்கி உள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் அவரை

43 வயதில் நீச்சல் குளத்தில் கிளாமர் போஸ்.. அஜித் பட நடிகையின் போட்டோஷூட் வைரல்..!

நடிகர் அஜித் படத்தில் அறிமுகமாகி தமிழில் பல படங்கள் நடித்த நடிகை 43 வயதில் நீச்சல் குளத்தில் கிளாமர் உடையில் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள