தினக்கூலி வீட்டில் இருந்து ஒரு பெண் எம்எல்ஏ… வாழ்த்திக் மகிழும் நெட்டிசன்கள்!

  • IndiaGlitz, [Monday,May 03 2021]

மேற்கு வங்காளத்தில் தற்போது நடைபெற்று முடிந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றிப் பெற்றுள்ளது. இந்நிலையில் பாஜக சார்பாக போட்டியிட்ட ஒரு பெண், எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். அதுவும் தினக்கூலி செய்யும் ஒரு ஏழைக் குடும்பத்தில் இருந்து வரும் ஒருபெண், கழிப்பறை வசதிக்கூட இல்லாத குடிசை வீட்டில் வாழும் ஒரு பெண் எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இந்தப் பெண்ணைக் குறித்துத்தான் தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மேற்கு வங்கத்தின் சல்தோரா எனும் தொகுதி பட்டியல் இனத்திற்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதியில் இருந்து விருப்பமனு அளித்து இருந்தார் சந்தனா பவுரி (30). இவர் பாஜக சார்பில் போட்டியிடுவார் என்று தொலைக்காட்சிகளில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சந்தனா தனது தொகுதி முழுக்க வாக்குக் கேட்டு பிரச்சாரம் செய்கிறார். அதோடு நடைபெற்ற தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் சந்தோஷ் குமார் என்பவரை 4,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெறுகிறார்.

இவரைப் பற்றிய செய்திகள் தற்போது இணையம் முழுக்க பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. காரணம் இந்தப் பெண்ணின் கணவர் ஒரு தினக்கூலி. அதோடு ஒரு குடிசை வீட்டில் வாழ்ந்து வருகிறார். வீட்டில் இரண்டு அறைகள் மட்டும் ஒரு ஃபேன் மற்றும் கொஞ்சம் புத்தகப் பைகளோடு வாழ்ந்து வரும் இவர் தற்போது அந்தத் தொகுதியின் எம்எல்ஏவாக வென்றுள்ளார். அதோடு நாட்டிலேயே பாஜக சார்பில் போட்டியின் ஏழையான வேட்பாளர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த அடிப்படைகளில் நெட்டிசன்கள் அனைவரும் சந்தனா பவுரிக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும் ஒரு பெண் வேட்பாளர் அதுவும் நெருக்கடியான ஒரு சூழலில் இருந்து வென்றிருப்பது இந்தியாவிற்கே ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்றும் அவரைப் பாராட்டி வருகின்றனர்.

More News

ஜெயலலிதாவுக்கு பின் நீங்கள் தான்: நடிகர் சித்தார்த் டுவிட்டுக்கு ஸ்டாலின் பதில்

ஜெயலலிதாவுக்கு பின் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒருவர் முதல்வராக பதவி ஏற்கப் போகிறார் என நடிகர் சித்தார்த் பதிவு செய்த ட்விட்டிற்கு முதல்வர் பதவியை ஏற்கவிருக்கும் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

ஆக்சிஜன் இன்றி வராண்டாவில் சுருண்டு கிடக்கும் கொரோனா நோயாளிகள்…பகீர் புகைப்படம்!

ஆக்சிஜன் இல்லை எனக் கூறும் தனியார் மருத்துவமனைகளின் மீது கடும் நடவடிக்கை,

ஆக்சிஜன் தட்டுப்பாடு… ஒரே மருத்துவமனையில் 24 பேர் உயிரைவிட்ட துயரச் சம்பவம்!

இந்தியா முழுக்க நேற்று 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

தந்தையின் தோல்வி குறித்து இன்ஸ்டாவில் ஸ்ருதிஹாசன் செய்த பதிவு!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் உலகநாயகன் நடிகருமான கமலஹாசன் கோவை தெற்கு தொகுதியில் சுமார் 1,700 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார் என்ற செய்தி

அடுத்த தேர்தல் வெற்றி குறித்த கேள்விக்கு பதில் அளித்த விஜய் வசந்த்!

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்தத் தேர்தலுடன் கன்னியாகுமரி மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் எம்பியாக இருந்த